பிரதமர் அலுவலகம்

பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை பிரதமர் திறந்துவைத்தார்


“இந்த ‘உயரப் பறக்கும் கொடி‘ பல நூற்றாண்டுகள் மாறலாம், யுகங்கள் மாறலாம், ஆனால் நம்பிக்கை என்றும் புனிதமானது என்பதற்கு சிறந்த அடையாளமாகத் திகழ்கிறது“

“தற்போது, புதிய இந்தியா, அதன் பண்டைக்கால அடையாளங்களுடன், நவீன எதிர்பார்ப்புகளுடன் பெருமிதம் கொண்டதாக திகழ்கிறது“

“அன்னையே, மக்கள் சேவகன் என்ற முறையில் மேலும் அதிக ஆற்றல், தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்ற என்னை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன் “

“கார்வி குஜராத் இந்தியாவின் பெருமிதம் மற்றும் புகழுக்கு இணையானது“

“பவகத், இந்தியாவின் பன்முகத்தன்மை வரலாற்றுடன் கூடிய உலகளாவிய நல்லிணக்க மையமாகத் திகழ்கிறது“


Posted On: 18 JUN 2022 12:05PM by PIB Chennai

பவகத் மலையில் புதுப்பிக்கப்பட்ட ஸ்ரீ காளிகா மாதா கோவிலை பிரதமர் திறந்துவைத்தார்இது, இப்பகுதியில் உள்ள சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்து செல்லும் மிகவும் பழமையான கோவில்களில் ஒன்றாகும்இந்தக் கோவிலின் புதுப்பிப்புப் பணிகள் இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டதுகோவிலில் முதற்கட்டமாக புதுப்பிக்கப்பட்ட பகுதிகளை, இந்தாண்டு ஏப்ரல் மாதம் பிரதமர் திறந்துவைத்தார்இன்று திறந்துவைக்கப்பட்ட இரண்டாம் கட்ட புதுப்பிப்புப் பணிகளுக்கு பிரதமர், கடந்த 2017-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார்.   கோவில் அடிவார விரிவாக்கம் மற்றும்  மூன்றடுக்கு வளாகம்தெருவிளக்கு மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் உள்ளிட்ட பணிகள் இதில் அடங்கும்

இன்றைக்கு இந்தக் கோவில் நிகழ்ச்சியில் பங்கேற்றது தமக்குக் கிடைத்த நல் வாய்ப்பு என பிரதமர் நன்றி தெரிவித்தார்.  500 ஆண்டுகளுக்குப் பிறகு, நாடு சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், இக்கோவிலில் புனிதமான கொடி தற்போது ஏற்றப்பட்டிருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.   பல நூற்றாண்டுகளுக்குப் பிறகு பவகத் மலை உச்சியில் இன்று மீண்டும் கொடியேற்றப்பட்டுள்ளதுஇந்த உயரப்பறக்கும் கொடி  நமது நம்பிக்கை மற்றும் ஆன்மீக அடையாளமாக மட்டுமின்றி, பல நூற்றாண்டுகள் மாறலாம், யுகங்கள் மாறலாம், ஆனால் நம்பிக்கை என்றும் புனிதமானது என்பதற்கு சிறந்த அடையாளமாகத் திகழ்கிறது என்றும் அவர் குறிப்பிட்டார்.   வரவிருக்கும் குப்த் நவராத்திரி-க்கு முன்பாக இந்த புதுப்பிப்புப் பணிகள் முடிவடைந்திருப்பது சக்தி  ஒருபோதும் குறைந்துவிடவோ அல்லது மாயமாகிவிடாது என்பதற்கான அறிகுறி என்றும் அவர் கூறினார்.  

அயோத்தி ராமர் கோவில், காசி விஸ்வநாதர் ஆலய வளாகம், கேதார்நாத் ஆலய வளாகம் போன்றவை பற்றிக் குறிப்பிட்ட பிரதமர்இந்தியாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார பெருமை மீட்டெடுக்கப்பட்டுள்ளது. தற்போது, புதிய இந்தியாஅதன் பண்டைக்கால அடையாளங்களுடன், நவீன எதிர்பார்ப்புகளுடன் பெருமிதம் கொண்டதாக திகழ்கிறது என்றும் தெரிவித்தார்.   நம்பிக்கைக்கான மையங்களுடன், நமது முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளும் உருவெடுக்கிறது, அந்தப் பயணத்தின் ஒரு பகுதி தான் இந்த மாபெரும் கோவில் என்றும் அவர் கூறினார்.   இந்தக் கோவில்அனைவரும் இனைவோம், அனைவரும் உயர்வோம், அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம், அனைவரும் முயற்சிப்போம் என்பதற்கான அடையாளமாகத் திகழ்வதாகவும் அவர் குறிப்பிட்டார்

காளி தேவியின் அருளைப் பெற்பிறகு, சுவாமி விவேகானந்தர் எப்படி மக்கள் பணியில் தம்மை அர்ப்பணித்துக் கொண்டார் என்பதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.   இன்று தாமும், மக்களுக்காக பணியாற்றுவதற்கான வலிமையை தமக்கு வழங்குமாறு அன்னையிடம் வேண்டியிருப்பதாகவும் அவர் கூறினார்.    அன்னையே, மக்கள் சேவகன் என்ற முறையில் மேலும் அதிக ஆற்றல், தியாகம் மற்றும் அர்ப்பணிப்புடன் நாட்டு மக்களுக்காக நான் தொடர்ந்து பணியாற்ற என்னை ஆசிர்வதிக்க வேண்டுகிறேன்என் வாழ்வில்எத்தகைய வலிமை, எந்த வகையில் எனக்குக் கிடைத்தாலும், அதனை ந்த நாட்டிலுள்ள தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் நலனுக்காக தொடர்ந்து அர்ப்பணிப்பேன் என்று திரு.மோடி பிரார்த்தனை செய்தார்.  

சுதந்திர அமிர்தப் பெருவிழா-வைக் கொண்டாடும் வேளையில்நாட்டின் விடுதலைப் போராட்டம் மற்றும் வளர்ச்சிப் பயணத்தில், குஜராத் அளப்பரிய பங்காற்றியிருப்பதாகவும் பிரதமர் தெரிவித்தார்.    கார்வி குஜராத் இந்தியாவின் பெருமிதம் மற்றும் புகழுக்கு இணையானது என்றும் அவர் குறிப்பிட்டார்.   சோம்நாத் கோவிலின் செழுமையான பாரம்பரியத்தில், பஞ்சமஹால் மற்றும் பவகத் ஆகியவை நமது பாரம்பரியத்திற்கு பெருமிதம் தேடித்தர பாடுபடுவதாகவும் அவர் கூறினார்கோவிலை புதுப்பிக்கும் பணிகள் நிறைவடைந்து, உயரப் பறக்கும் கொடி இன்று ஏற்றப்பட்டிருப்பது, அன்னை காளி, பக்தர்களுக்கு வழங்கிய மாபெரும் கொடை என்றும் அவர் தெரிவித்தார்.   இந்த புதுப்பிப்புப் பணியின்போது, கோவிலின் பழமை மாறாமல் பணிகள் மேற்கொள்ளப்பட்டதாக அவர் கூறினார்.   கோவிலுக்கு வந்து செல்வது எளிமையாக்கப்பட்டிருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர்முன்பு, பவகத் பயணம் மிகவும் சிரமமானது என்பதால், வாழ்க்கையில் ஒருமுறையாவது அன்னையை தரிசிக்க வேண்டும் என்று மக்கள் கூறி வந்தனர்தற்போது, வசதிகளை மேம்படுத்தியிருப்பதன் மூலம் எளிதில் தரிசனம் செய்ய வழிவகை ஏற்பட்டுள்ளது என்றார்.   பக்தர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டுமென கேட்டுக் கொண்ட அவர்பவகத்தில் ஆன்மிகம், வரலாறு, இயற்கை, கலை மற்றும் கலாச்சாரம் அடங்கியுள்ளதுஇங்கு ஒருபுறம் அன்னை மகாகாளி சக்திபீடமும், மறுபுறம் பாரம்பரிய ஜெயின் கோவிலும் உள்ளதுஇதனால், பவகத், இந்தியாவின் பன்முகத்தன்மை வரலாற்றுடன் கூடிய உலகளாவிய நல்லிணக்க மையமாகத் திகழ்கிறது என்றார்பல்வேறு அம்மன் கோவில்கள் இருப்பதை சுட்டிக்காட்டிய பிரதமர்குஜராத் அன்னையின் அருள் என்ற பாதுகாப்பு வட்டத்திற்குள் உள்ளதாகவும் கூறினார்

மக்கள் நம்பிக்கை வைத்துள்ள இடங்களை மேம்படுத்துவதன் மூலம்இந்தப் பகுதியில் சுற்றுலா, வேலைவாய்ப்புகள் அதிகரிப்பதோடு, இப்பகுதியின் கலை மற்றும் கைவினைத்திறன் பற்றிய விழிப்புணர்வும் அதிகரிக்கும் என்பதை பிரதமர் சுட்டிக்காட்டினார்.   பஞ்சமஹால், பிரபல இசைக் கலைஞர் மேஸ்ட்ரோ பைஜு பாவரா பிறந்த பூமி என்பதை நினைவுகூர்ந்த பிரதமர்எங்கு பாரம்பரியமும் கலாச்சாரமும் வலிமை பெறுகிறதோ, அங்கு திறமையும் செழித்து வளரும் என்றார்.   2006-ம் ஆண்டு சாம்பனரிலிருந்து ஜோதிகிராம் திட்டம் தொடங்கப்பட்டதையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.  

******************



(Release ID: 1835079) Visitor Counter : 183