சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதார அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்; “வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0” நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார்

Posted On: 13 JUN 2022 3:59PM by PIB Chennai

மாநில சுகாதார அமைச்சர்களுடன் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கலந்துரையாடினார்; “வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0” நிலைமை மற்றும் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். அப்போது பேசிய அவர், கொவிட் இன்னமும் முடிந்துவிடவில்லை. சில மாநிலங்களில் கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்த சமயத்தில் விழிப்புடன் இருப்பதும், கொவிட் தடுப்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பதும் முக்கியமானதாகும். முகக்கவசம் அணிவது, தனி நபர் இடைவெளியை பராமரிப்பது ஆகியவை தொற்று பரவுவதை தடுக்கும் என்று குறிப்பிட்டார்.

ஜூன் 1-ந் தேதி தொடங்கப்பட்டுள்ள வீட்டுக்கு சென்று தடுப்பூசி 2.0 இயக்கத்தை விரைவுபடுத்துமாறும் 12 முதல் 17 வயதுவரை உள்ளவர்களுக்கான ஒன்றாவது மற்றும் இரண்டாவது தவணை டோஸ்கள் செலுத்துவதை விரைவுபடுத்துமாறும் மத்திய அமைச்சர் திரு மன்சுக் மாண்டவியா, மாநில சுகாதார அமைச்சர்களிடம் வலியுறுத்தினார்.  இந்தப்பிரிவினரை அடையாளம் காண பள்ளிகள் அடிப்படையில் முகாம்களை நடத்துமாறும் கோடை விடுமுறையில் உள்ளவர்களை வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி செலுத்துமாறும் அவர் கேட்டுக்கொண்டார்.  கொவிட் 19 தடுப்பூசி வீணாகாமல் இருப்பதை உறுதிசெய்யுமாறு அமைச்சர் அறிவுறுத்தினார்.

 மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீன் பவார் உடனிருந்தார்.

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833528

***************


(Release ID: 1833569) Visitor Counter : 262