திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் அமைச்சகம்

பிரதமரின் தேசிய தொழிற்பயிற்சி முகாம் ஜுன் 13-ம் தேதி நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் நடைபெறுகிறது

Posted On: 13 JUN 2022 9:13AM by PIB Chennai

இளைஞர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்காகவும், பெருநிறுவனங்களில் அதிக வேலை வாய்ப்புகளைப் பெறுவதற்காகவும், திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவோர் அமைச்சகம் சார்பாக, மாதந்தோறும் பிரதமரின் தேசிய தொழிற்பயிற்சி முகாம் நடைபெறுகிறது. ஜுன் 13 2022 (இன்று) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நாடு முழுவதும் 200-க்கும் மேற்பட்ட இடங்களில் முகாம் நடைபெறுகிறது. 36-க்கும் மேற்பட்ட துறைகளைச் சேர்ந்த 1000-க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை தருவதற்காக தொழிற்பயிற்சி முகாமில் பங்கேற்கின்றன. 5 முதல் 12-ம் வகுப்பு வரை தேர்ச்சி பெற்ற சான்றிதழ், திறன் பயிற்சி சான்றிதழ், தொழில்துறை பயிற்சி நிறுவனத்தில் டிப்ளமோ பயின்றவர்கள் மற்றும் பட்டதாரிகள் இந்த பயிற்சி முகாமில் கலந்து கொள்ளலாம். வெல்டர்கள், எலக்ட்ரீஷியன், மெக்கானிக் உள்ளிட்ட பணிகளுக்கு பயிற்சி முகாம் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர்.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1833389

***************



(Release ID: 1833425) Visitor Counter : 266