பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

குஜராத்தின் நவசரியில் ‘குஜராத் பெருமை இயக்க' நிகழ்ச்சியில் பிரதமரின் உரை

Posted On: 10 JUN 2022 3:11PM by PIB Chennai

குஜராத் முதல்வர் திரு புபேந்திர பட்டேல் அவர்களே, நாடாளுமன்ற உறுப்பினர் திரு சி.ஆர். பாட்டில் அவர்களே, மத்திய அமைச்சர் திருமதி தர்ஷனா அவர்களே, நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களே, குஜராத் மாநில அமைச்சர்களே, சகோதர சகோதரிகளே!

 

ரூ. 3,000 கோடிக்கும் அதிகமான திட்டங்களைத் திறந்து வைக்கவும், அடிக்கல் நாட்டவும் எனக்கு இன்று வாய்ப்பு அளிக்கப்பட்டது. தெற்கு குஜராத்தில் வசிக்கும் கோடிக்கணக்கான நண்பர்களின் வாழ்க்கையை இந்த அனைத்து திட்டங்களும் எளிதாக்கவுள்ளன.‌ மின்சாரம், தண்ணீர், சாலை, சுகாதாரம் கல்வி, குறிப்பாக நமது பழங்குடி பகுதிகளில் அனைத்து விதமான இணைப்புகள் சம்மந்தப்பட்ட திட்டங்களால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும்.

 

சகோதர, சகோதரிகளே,

கடந்த எட்டு ஆண்டுகளில், கோடிக்கணக்கான புதிய மக்களையும் பல புதிய பகுதிகளையும், வளர்ச்சியின் கனவுகள் மற்றும் இலட்சியங்களுடன் சீரமைப்பதில் நாம் வெற்றி பெற்றுள்ளோம். கிராமங்கள் மற்றும் பழங்குடி பகுதிகளில் வங்கி சேவைகள் இல்லாமையும் அதிகபட்சமாக இருந்து வந்தது.  ‘அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம்' என்ற தாரக மந்திரத்தைப் பின்பற்றி கடந்த 8 ஆண்டுகளில் நமது அரசு ஏழை மக்களின் நலனிற்கும்,  அதிக முக்கியத்துவம் அளித்துள்ளது. ஏழை மக்களுக்கு 100% அதிகாரமளிக்கும் பிரச்சாரத்தை அரசு தற்போது தொடங்கியுள்ளது. ஏழை மற்றும் பழங்குடி மக்களுக்கான திட்டப் பலன்களிலிருந்து ஒருவரும் விடுபடாததை இந்த திட்டம் உறுதி செய்யும்.

 

ஒட்டுமொத்த உலகையும் கொவிட் பெருந்தொற்று புரட்டிப் போட்டது, எனினும் 200 கோடி தடுப்பூசிகளை செலுத்திய ஒரே நாடு, இந்தியாதான். வளர்ச்சிக்காக வனப்பகுதிகளில் நீண்டதூரம் செல்ல வேண்டியது அவசியமாகிறது. சாலைகளை கட்டமைத்தல், ஒளியழைகளை அமைத்தல் எதுவாக இருந்தாலும் லட்சக்கணக்கான மக்களின் வாழ்க்கையை மாற்ற நாம் திட்டமிடுகிறோம்‌ இதுபோன்ற திட்டங்களால் நவசாரி மற்றும் தாங் மாவட்டங்கள் தற்போது பயனடைந்து வருகின்றன. சுமார் ரூ. 500 கோடி மதிப்பில் கட்டப்பட்டு வரும் மருத்துவமனை மற்றும் மருத்துவ கல்லூரியால் நவசாரியில் உள்ள 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பயன்பெற உள்ளனர்.

 

நண்பர்களே,

வளர்ச்சி என்பது ஒட்டுமொத்தமானதாக, உலகளாவியதாக அனைத்தையும் உள்ளடக்கியதாக இருக்க வேண்டும். அந்த பாதையில் தான் நாம் பணியாற்றி வருகிறோம். குஜராத்தில் இதுபோல் ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. தாய்மார்கள் மற்றும் சகோதரிகளின் ஆசிகள்தான் எனக்கு உத்வேகம் அளிக்கின்றன. இது போன்ற முன்னேற்றகரமான திட்டங்களை உரிய நேரத்திற்குள் மேற்கொண்டு, சமூகத்தின் கடைசி மைல் மக்களைச் சென்றடையும் மாநில அரசையும் நான் பாராட்டுகிறேன்.

 

உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துகள்.

 

பொறுப்புதுறப்பு: இது பிரதமர் உரையின் தோராயமான மொழிபெயர்ப்பாகும்.பிரதமர் தமது உரையை இந்தியில் வழங்கியிருந்தார்.

**************


(Release ID: 1833146) Visitor Counter : 143