பிரதமர் அலுவலகம்

நவ்ராசியில் ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’ போது பலவகை வளர்ச்சித் திட்டங்களைப் பிரதமர் தொடங்கிவைத்தார்


“ரூ.3050 கோடி மதிப்புள்ள பலவகை திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / தொடங்கிவைத்தார்”

“குஜராத்தில் விரைவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் புகழ்மிக்க பாரம்பரியத்தை இரட்டை என்ஜின் அரசு நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்கிறது“

“ஏழைகளின் நல்வாழ்வுக்கும், ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும் அரசு அதிமுக்கியத்துவம் அளிக்கிறது”

“எளிதில் பெற முடியாதவகையில் தொலைதூரத்தில் வாழும் அனைத்து ஏழைகளும், அனைத்து பழங்குடியினரும் தூய்மையான தண்ணீர் பெற உரிமை பெற்றவர்கள்”

“அரசில் அங்கம்வகிப்பதை சேவைக்கான வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்”

“பழைய தலைமுறையினர் எதிர்கொண்ட பிரச்சனைகளை நமது புதிய தலைமுறையினர் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்

Posted On: 10 JUN 2022 12:48PM by PIB Chennai

‘குஜராத் பெருமை இயக்கம்’ என்ற நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று பங்கேற்றார்.  நவ்ராசியில்  உள்ள பழங்குடியினர் பகுதியான குட்வேலில் ‘குஜராத் பெருமை இயக்கத்தின்’ போது  இன்று அவர் பலவகை வளர்ச்சி திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார் / தொடங்கிவைத்தார். 7 திட்டங்களின் தொடக்கம், 12 திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல், 14 திட்டங்களுக்கு பூமி பூஜை செய்தல் ஆகியவை இதில் அடங்கும். போக்குவரத்து தொடர்பை அதிகரித்தல், வாழ்க்கையை எளிதாக்குவதை விரிவுபடுத்துதல் என்பவற்றுடன் இந்த பகுதியில் குடிநீர் விநியோகத்தை மேம்படுத்த இந்த திட்டங்கள் உதவும். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதலமைச்சர் திரு பூபேந்திர ரஜினிகாந்த் பட்டேல், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 இங்கு கூடியிருந்தோரிடையே உரையாற்றிய பிரதமர்,  இங்கு பழங்குடியின மக்கள் பெருமளவில் திரண்டிருப்பதை சுட்டிக்காட்டினார். இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு பெருமையுடன் ஏற்பாடு செய்வது, பழங்குடியின சகோதர, சகோதரிகளின் தொடர்ச்சியான அன்பின் அறிகுறியாக உள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.  பழங்குடி மக்களின் ஆற்றல் மற்றும் உறுதியின் புகழை அங்கீகரிக்கும் விதமாக நவ்ராசி மண்ணுக்கு அவர் தலைவணங்கினார்.

 கடந்த 20 ஆண்டுகளில் விரைவான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் இந்த வளர்ச்சியால் ஏற்பட்டுள்ள புதிய உத்வேகம் குஜராத்தின் பெருமையாகும். குஜராத்தில் விரைவான, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியில் புகழ்மிக்க பாரம்பரியத்தை இரட்டை என்ஜின் அரசு நம்பிக்கையுடன் முன்னெடுத்து செல்கிறது. இன்றைய திட்டங்கள்  சூரத், நவ்ராசி, வல்சாத், தெற்கு குஜராத்தின் தபி மாவட்டங்களில்  வாழ்க்கையை எளிதாக்கும் என்று அவர் கூறினார்.

8 ஆண்டுகளுக்கு முன் குஜராத் மக்கள் எவ்வாறு தம்மை தில்லிக்கு அனுப்பிவைத்தார்கள் என்பதை பிரதமர் நினைவுகூர்ந்தார். கடந்த 8 ஆண்டுகளில் மக்களின் புதிய பல பகுதிகளை இணைப்பதிலும், வளர்ச்சி நடைமுறைகள் மற்றும் விருப்பங்களை நிறைவேற்றுவதிலும் அரசு வெற்றி பெற்றுள்ளது என்று அவர் கூறினார்.  வெறும் அடிப்படை தேவைகளுக்கு மட்டுமே ஏழைகள் ஒடுக்கப்பட்டோர், தலித் மக்கள், பழங்குடியினர், பெண்கள் மற்றும் நலிந்த பிரிவினர்  தங்களின் வாழ்நாள் முழுவதையும்  செலவிட்ட காலத்தை அவர் நினைவுகூர்ந்தார்.  முந்தைய அரசுகள் வளர்ச்சியை தங்களின் முன்னுரிமையாக எடுத்துக்கொள்ளவில்லை. மிகவும் உதவி தேவைப்படும் பிரிவினரும், பகுதிகளும், வசதிகளின்றி இருந்தன. கடந்த 8 ஆண்டுகளில் அனைவரும் இணைவோம், அனைவரும் உயர்வோம் என்ற மந்திரத்தை பின்பற்றி ஏழைகளின் நல்வாழ்வுக்கும், ஏழைகளுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கும் தமது அரசு அதிமுக்கியத்துவம் அளித்திருப்பதாக அவர் கூறினார்.  நலத்திட்டங்களை முறைப்படுத்துவதன் மூலம் ஏழைகளுக்கு 100 சதவீதம் அதிகாரம் அளிக்கும் திட்டத்தை அரசு செயல்படுத்தி வருவதாக அவர் தெரிவித்தார். மேடைக்கு செல்வதற்கு முன் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த பயனாளிகளுடன் பிரதமர் கலந்துரையாடினார்.  பொது மக்கள்  மற்றும் பயனாளிகளுடன் தொடர்பு கொள்வது, வளர்ச்சிக்கான ஆதரவுக்கு  புதிய உத்வேகத்தை அளிக்கிறது என்று அவர் கூறினார்.

பின்னர் குஜராத்தி மொழியில் பேசிய பிரதமர், உள்ளூர் மக்களுடனான தமது நீண்டகால பிணைப்பை நினைவுகூர்ந்தார்.  இந்தப் பகுதியில் தாம் பணியாற்றிய காலத்தில் மக்களின் விருந்தோம்பலையும், அன்பையும்  அவர் நினைவுகூர்ந்தார். “உங்களின் அன்பும், ஆசியும் எனது பலமாகும்” என்று கூறியபோது, பிரதமரின் நெகிழ்ச்சியை காண முடிந்தது. பழங்குடி சமூகத்தினரின் குழந்தைகள் சாத்தியமான அனைத்து வாய்ப்புகளையும் பெற வேண்டும் என்று கூறிய அவர், அவர்களின் தூய்மையின் தரம், ஞானம், அமைப்பு, ஒழுக்கம் ஆகியவை பற்றியும் குறிப்பிட்டார். பழங்குடி மக்களிடையே இடம் பெற்றுள்ள சமூக மாண்புகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்தும் அவர் பேசினார். பழங்குடி மக்கள் பகுதிகளில் குடிநீரை உறுதி செய்வதற்கான தமது பணி குறித்தும் அவர் பேசினார்.  3 ஆயிரம்  கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்புள்ள இன்றைய திட்டங்கள், முந்தைய காலத்தில் ஒரு சிறிய தண்ணீர் தொட்டி திறப்பதற்கு அளிக்கப்பட்ட தலைப்பு செய்திகளோடு ஒப்பிடுகையில், மிகவும் முரண்பட்டதாக உள்ளது. தொடர்ச்சியான நல மற்றும் வளர்ச்சி திட்டங்கள் நீண்டகாலமாக தமது நிர்வாக முறையாக உள்ளது என்று கூறிய அவர், இந்த திட்டங்கள் மக்கள் நலன் மற்றும் ஏழைகள் நலன் என்பதை நோக்கமாக கொண்டவை என்றும் வாக்குகளுக்காக என்பதற்கு அப்பாற்பட்டதாகும் என்றும் கூறினார்.  எளிதில் பெற முடியாதவகையில் தொலைதூரத்தில் வாழும் அனைத்து ஏழைகளும், அனைத்து பழங்குடியினரும் தூய்மையான தண்ணீர் பெற உரிமை பெற்றவர்கள் ஆவர்.  அடிக்கல் நாட்டப்பட்ட மற்றும் அவரால் தொடங்கிவைக்கப்பட்ட திட்டங்கள் பிரதமருக்கு முத்திரை பதிப்பதாகும். மேலும் இந்த திட்டங்கள் உரிய நேரத்தில் முடிவடைவதற்கான பணிக்கலாச்சாரத்தில்  மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். “அரசில் அங்கம்வகிப்பதை சேவைக்கான வாய்ப்பாக நாங்கள் கருதுகிறோம்” என்பதை அவர்  வலியுறுத்தினார். பழைய தலைமுறையினர் எதிர்கொண்ட பிரச்சனைகளை நமது புதிய தலைமுறையினர் எதிர்கொள்ளக்கூடாது என்பதில் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் எனவே இந்த திட்டங்கள் தூய்மையான குடிநீர், அனைவருக்கும் தரமான கல்வி போன்ற அடிப்படை வசதிகளை உறுதி செய்வதாக உள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இந்த பகுதியில் அறிவியல் பள்ளி கூட இல்லாத காலம் இருந்தது. ஆனால் இப்போது மருத்துவ கல்லூரிகளும், பல்கலைக்கழகங்களும் வருகின்றன. அடிப்படை கட்டமைப்பு, கல்வி, வணிகம், அதிதொலைவில் உள்ள பகுதிகளுக்கும் போக்குவரத்து தொடர்பான திட்டங்கள் ஆகியவற்றின் மூலம் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டு வருவதாக பிரதமர் கூறினார். இயற்கை வேளாண்மையில் ஈடுபடுவதற்காக டாங் மாவட்டம் மற்றும் தெற்கு குஜராத்தையும் அவர்  பாராட்டினார். மருத்துவம், பொறியியல் போன்ற தொழில்நுட்ப பாடங்களிலும் தாய்மொழி கல்வி என்பது ஓபிசி, பழங்குடி குழந்தைகளுக்கான வாய்ப்பை ஏற்படுத்திதரும் என்று அவர் கூறினார்.  வனச்சகோதரர்கள் திட்டத்தின் புதிய கட்ட அமலாக்கத்திற்காகவும், மாநில அரசை அவர் பாராட்டினார். ஒட்டுமொத்த, அனைவரையும் உள்ளடக்கிய, சமமான வளர்ச்சிக்காக நாங்கள் பாடுபட்டு வருகிறோம் என்று கூறி பிரதமர் உரையை நிறைவுசெய்தார்.

 ரூ.961 கோடி மதிப்பில் தபி, நவ்சாரி, சூரத் மாவட்டங்களில்  குடியிருப்புதாரர்களுக்கு 13 குடிநீர் விநியோக திட்டங்களுக்கு பிரதமர் பூமி பூஜை செய்தார். நவ்சாரி மாவட்டத்தில் ரூ.542 கோடி செலவில் கட்டப்படவுள்ள மருத்துவக் கல்லூரிக்கும் அவர் பூமிபூஜை செய்துவைத்தார். இது இந்தப்பகுதியின் மக்களுக்கு கட்டுப்படியான, தரமான மருத்துவ வசதியை அளிக்க உதவும்.

 ரூ.586 கோடி செலவில் கட்டப்பட்ட மதுபான் அணையை அடிப்படையாக கொண்டு அஸ்தால் பகுதிக்கு குடிநீர் விநியோகம் செய்யும் திட்டத்தை பிரதமர்  தொடங்கிவைத்தார்.  ரூ.163 கோடி மதிப்புள்ள  குழாய் மூலம் குடிநீர் திட்டமும் பிரதமரால் தொடங்கிவைக்கப்பட்டது. சூரத், நவ்சாரி, வல்சாத், தபி மாவட்டங்களில் குடியிருப்போருக்கு பாதுகாப்பான போதிய அளவிலான குடிநீரை இந்த திட்டங்கள் வழங்கும்.

 தபி மாவட்டத்தில் குடியிருப்போருக்கு மின்சாரம் வழங்குவதற்கு ரூ.85 கோடி செலவில் கட்டப்பட்ட வீர்பூர் வயாரா துணைமின் நிலையத்தை பிரதமர் தொடங்கிவைத்தார். கழிவுநீர் சுத்தம் செய்வதற்காக வல்சாத் மாவட்டத்தின் வாப்பி நகருக்கான தினசரி 14 மில்லியன் லிட்டர் திறன் கொண்ட ரூ.20 கோடி மதிப்பிலான கழிவுநீர் சுத்திகரிப்பு திட்டமும் தொடங்கிவைக்கப்பட்டது. ரூ.21 கோடி செலவில்  நவ்சாரியில் கட்டப்பட்ட அரசு குடியிருப்புகளை பிரதமர் தொடங்கிவைத்தார். ஒவ்வொன்றும் ரூ.12 கோடி செலவிலான பிப்லாய்தேவி- ஜூனெர்- சிச்விஹிர்-பிப்பல்தஹாத் இடையே அமைக்கப்பட்ட சாலையையும், டாங் என்ற இடத்தில் கட்டப்பட்ட பள்ளிக் கட்டிடங்களையும் அவர் தொடங்கிவைத்தார்.

 சூரத், நவ்சாரி, வல்சாத், தபி மாவட்டங்களில் குடியிருப்போருக்கு தூய்மையான குடிநீர் வழங்க ரூ.549 கோடி மதிப்பிலான 8 குடிநீர் விநியோக திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  நவ்சாரி மாவட்டத்தில் ரூ.33 கோடி செலவில் கட்டப்படவுள்ள கேர்காம், பிப்பல்கெட் ஆகியவற்றை  இணைக்கும் சாலைக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.27 கோடி செலவில் சுப்பா வழியாக நவ்சாரி-பர்தோலி இடையே மற்றொரு 4 வழிச்சாலை அமைக்கப்படும். டாங் என்ற இடத்தில் ரூ.28 கோடி செலவில் மாவட்ட பஞ்சாயத்து அலுவலகம் கட்டுவதற்கும், ரூ.10 கோடி செலவில் அடுக்கடுக்கான வேகத்தடைகளை சாலைகளில் அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல்நாட்டினார்.

***************



(Release ID: 1832882) Visitor Counter : 138