உள்துறை அமைச்சகம்
தேசிய விருதுகளுக்கான போர்ட்டல் தொடக்கம், பல்வேறு விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
Posted On:
09 JUN 2022 3:18PM by PIB Chennai
பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை அங்கீகரிக்கும் வகையில் மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள், முகமைகள் பல்வேறு விருதுகளை நிறுவியுள்ளன.
இந்த விருதுகளுக்கான விண்ணப்பங்களை வரவேற்கும் வகையில், பொதுவான தேசிய விருதுதளம் மத்திய அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகளில் மக்களின் மக்களை பங்களிக்க செய்யவும், வெளிப்படை தன்மையை உறுதி செய்யவும் இந்த தளம் வழிக்கும். இந்த விருதுகளுக்கு தனி நபர்கள், அமைப்புகளை மக்கள் பரிந்துரைக்க செய்வதே இத்தளத்தின் நோக்கமாகும்.
பின் வரும் விருதுகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அதன் விவரம் வருமாறு:-
- பத்மவிருதுகள் – 15.9.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
- சர்தார்பட்டேல் தேசிய ஒற்றுமை விருது விண்ணப்பங்கள் பெற கடைசிநாள் – 31.7.2022
- டென்சிங் நார்கே தேசிய சாகச விருது- 16.6.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்
- ஜீவன் ரக்ஷா படக் தொடர் விருதுகள் – 30.9.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படும்.
- பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா தொலைத்தொடர்பு திறன் விருது-16.6.2022 வரை விண்ணப்பங்களை அனுப்பலாம்.
***************
(Release ID: 1832612)
Visitor Counter : 215