பிரதமர் அலுவலகம்
'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கைமுறை - லைஃப் இயக்கம்' பிரதமர் தொடங்கி வைத்தார்
“மனிதனின் கூட்டு முயற்சிகள் மற்றும் வலுவான நடவடிக்கைகளைக் கொண்டு உலகம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளித்து, நிலையான வளர்ச்சியை அடைய வேண்டியது காலத்தின் அவசியம்”
प्रविष्टि तिथि:
05 JUN 2022 7:31PM by PIB Chennai
'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை - லைஃப் இயக்கம்' எனப்படும் உலகளாவிய கருத்தரங்கை பிரதமர் திரு.நரேந்திர மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். ஆய்வுகளுக்கான லைஃப் அமைப்பின் உலகளாவிய அழைப்பு' நிகழ்ச்சியில் தொடக்கவுரை ஆற்றிய பிரதமர், கல்வி நிறுவனங்கள், பல்கலைக் கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், கல்வியாளர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்டோர் சுற்றுச்சூழலை காப்பது தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை வழங்குமாறு கேட்டுக் கொண்டார்.
நிகழ்ச்சியில் உரையாற்றிய பிரதமர், 'சுற்றுச்சூழலுக்கான வாழ்க்கை முறை - லைஃப் இயக்கம்' என்ற உலகம் தழுவிய முயற்சியை தொடங்க இன்று மிகப்பொருத்தமான நாள் என்று தெரிவித்தார். உலகம் தற்போது எதிர்கொள்ளும் பிரச்சினைகளை சமாளிக்க, மனிதனின் கூட்டு முயற்சிகள் மற்றும் வலுவான நடவடிக்கைகளைக் கொண்டு, உலகம் தற்போது எதிர்கொள்ளும் பிர ச் சினைகளை சமாளித்து நிலையான வளர்ச்சியை அடைய வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று பிரதமர் கூறினார்.
உலகளாவிய இந்த கூட்டு முயற்சி, 2021-ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் காலநிலை மாற்றம் தொடர்பான மாநாட்டில் தன்னால் முன்மொழியப்பட்டதை பிரதமர் நினைவுகூர்ந்தார். காலத்துக்கு ஏற்ப உலகத்துடன் ஒத்துப் போகும், தீமை விளைவிக்காத வாழ்க்கை முறையை வாழ்வது என்பதே லைஃப் இயக்கத்தின் நோக்கம் என்றும், அத்தகைய வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்கள் “ப்ரோ-பிளானட் பீப்புள்” என்று அழைக்கப்படுவதாகவும் பிரதமர் கூறினார். லைஃப் இயக்கம், எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் நிகழ்காலத்துக்காக செயல்படுகிறது. குறைவாக பயன்படுத்துவது, மீண்டும் பயன்படுத்துவது, மற்றும் மறுசுழற்சி என்பது நம் வாழ்க்கையுடன் கலந்துள்ள ஒன்று என்று தெரிவித்த பிரதமர், பொருளாதார வளர்ச்சி என்பது நமது கலாச்சாரம், வாழ்க்கை முறை ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக உள்ளதாகவும் குறிப்பிட்டார்.
கரியமில வாயு இல்லாத வாழ்க்கைமுறை குறித்து மகாத்மா காந்தி வலியுறுத்தியதை பிரதமர் நினைவுகூர்ந்தார். உலகம் ஒன்று. ஆனால் முயற்சிகள் பல என்று தெரிவித்த பிரதமர், சுற்றுச்சூழல் தொடர்பான முயற்சிகளுக்கு ஆதரவு தெரிவிக்கவும், உலகளாவிய சுற்றுச்சூழல் நலனை மேம்படுத்தவும் இந்தியா எப்போதும் தயாராக உள்ளது.
***************
(Release ID: 1831349)
(रिलीज़ आईडी: 1831496)
आगंतुक पटल : 1103
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
Malayalam
,
Telugu
,
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada