பிரதமர் அலுவலகம்

சர்வதேச முன்முயற்சியான ‘லைப் இயக்கத்தை‘ 5 ஜுன் அன்று பிரதமர் தொடங்கி வைக்கிறார்


‘யோசனைகளுக்கான சர்வதேச அழைப்பு‘ லைப், சுற்றுச்சூழல் விழிப்புடன் கூடிய வாழ்க்கைமுறையை பின்பற்றுவது குறித்த கருத்துக்களை வரவேற்கிறது

கிளாஸ்கோ-வில் நடைபெற்ற COP26 மாநாட்டின்போது, லைப் யோசனை பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது

‘மனப்பூர்வமற்ற மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பயன்பாட்டிற்கு‘ப் பதிலாக, ‘மனப்பூர்வமான மற்றும் திட்டமிட்ட பயன்பாட்டில்‘ இது கவனம் செலுத்துகிறது

Posted On: 04 JUN 2022 1:48PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திர மோடி, 5 ஜுன், 2022 அன்று, ‘சுற்றுச்சூழல் இயக்கத்திற்கான வாழ்க்கை முறையை‘  கானொலி வாயிலாகத் தொடங்கி வைக்கிறார்.   உலகம் முழுவதும் உள்ள தனிநபர்கள், சமுதாயத்தினர் மற்றும் நிறுவனங்கள், சுற்றுச்சூழல் உணர்வுடன் கூடிய வாழ்க்கைமுறையை பின்பற்றுவதற்கும், வலியுறுத்துவதற்கும், கல்வியாளர்கள்,  பல்கலைகழகங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களிடமிருந்து யோசனைகள் மற்றும் பரிந்துரைகளை  ‘யோசனை கோருவதற்கான லைப் சர்வதேச அழைப்பு‘  தொடங்கும்.  இந்த நிகழ்ச்சியின்போது, பிரதமர் சிறப்புரை ஆற்றுகிறார்.  

இந்த நிகழ்ச்சியில்,  பில் & மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளையின் இணை- தலைவர் திரு. பில் கேட்ஸ்;  பருவநிலை பொருளாதார நிபுனர் லார்டு நிக்கோலஸ் ஸ்டெர்ன்;  தள்ளுதல் கோட்பாட்டை உருவாக்கிய பேராசிரியர் காஸ் சன்ஸ்டீன்;  உலக ஆதார நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைவர் திரு.அனிருத்தா தாஸ் குப்தா;  யுஎன்இபி நிறுவனத்தின் சர்வதேச தலைவர் திருமதி.இங்கர் ஆண்டர்சன்;  ஐ.நா.வளர்ச்சித் திட்டத்தின் தலைவர் திரு.ஆச்சிம் ஸ்டெய்னர் மற்றும் உலக வங்கியின் தலைவர் திரு.டேவிட் மால்பாஸ் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். 

லைப் யோசனையை, கிளாஸ்கோவில் கடந்த ஆண்டு நடைபெற்ற COP26 எனப்படும் ஐ.நா. பருவநிலை மாற்ற மாநாட்டில் பேசியபோது பிரதமரால் அறிமுகப்படுத்தப்பட்டது.   இந்த யோசனை, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு வாழ்க்கைமுறையை ஊக்குவிப்பதுடன்,   ‘மனப்பூர்வமற்ற மற்றும் பாதிப்பை ஏற்படுத்தும் பயன்பாட்டிற்கு‘ப் பதிலாக,  ‘மனப்பூர்வமான மற்றும் திட்டமிட்ட பயன்பாட்டில்‘ இது கவனம் செலுத்துகிறது. 

*****

 

 



(Release ID: 1831170) Visitor Counter : 309