சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

இரண்டு மாதகால, “வீடு தேடி சென்று தடுப்பூசி 2.0” சிறப்பு முகாம் இன்று தொடக்கம்


கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை விரைவுப்படுத்தவும், தகுதியுள்ள அனைத்து பயனாளிகளுக்கும் வீடு, வீடாகச் சென்று தடுப்பூசி போட நடவடிக்கை

Posted On: 01 JUN 2022 1:16PM by PIB Chennai

அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்படுவதை விரைவுப்படுத்துவற்கும், அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்யவும் “வீடு தேடிச் சென்று தடுப்பூசி-2.0” திட்டம் நாடு முழுவதும் தொடங்கப்பட்டுள்ளது. தகுதியுடைய பயனாளிகள் அனைவருக்கும் தடுப்பூசி போடப்படுவதை உறுதி செய்து, விரைவுப்படுத்துமாறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு அறிவுத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம், அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேசங்களின் சுகாதாரத்துறை செயலாளர்கள் மற்றும் மருத்துவர்களுடன் ஆலோசனை நடத்திய மத்திய சுகாதாரத்துறை செயலர் திரு.ராஜேஷ் பூஷன் இதனை தெரிவித்தார்.

நவம்பர் 2021-ல் தொடங்கப்பட்ட “வீடு தேடி சென்று தடுப்பூசி” திட்டத்தின் அனுபவத்தின் அடிப்படையில்  “வீடு தேடி சென்று தடுப்பூசி-2.0” திட்டம் ஜுன் 1 2022 முதல் ஜுலை 31 2022 வரை நடைபெற உள்ளது. இந்த திட்டத்தின் நோக்கம், வீடு, வீடாக சென்று தடுப்பூசி போடுவதன் மூலம் மக்கள் அனைவருக்கும் முதல், இரண்டாவது மற்றும் முன்னெச்சரிக்கையாக தடுப்பூசி போடுவதும், விழிப்புணர்வை ஏற்படுத்துவதும் ஆகும். முதியோர் இல்லங்கள், பள்ளி, கல்லூரிகள், 12 முதல் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்குட்பட்டவர்கள் தடுப்பூசி போட்டுக் கொள்வது குறைவாக உள்ளது. தடுப்பூசி செலுத்திக் கொள்வதன் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் தடுப்பூசி செலுத்துவதை முக்கிய நோக்கமாகக் கொண்டு இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்திய அரசின் விரிவான திட்டமிடல் மற்றும் மேற்கொண்ட முயற்சிகள் காரணமாக தேசிய தடுப்பசி இயக்கம் சாதனைகளைப் படைத்துள்ளது. இதுவரை நாடு முழுவதும் 193.57 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. இதுவரை 15 வயதுக்குட்பட்ட நபர்களில் சுமார் 96.3 சதவீதம் பேர் முதல் தவணை தடுப்பூசியும், 86.3 சதவீதம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனர்.

நவம்பர் 2 2021 தொடங்கப்பட்ட இந்த திட்டம், முதியோர், மாற்றுத்திறனாளிகள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள தயக்கம் காட்டுபவர்கள் உட்பட அனைத்து குடிமக்களுக்கும் தடுப்பூசி சென்றடைவதை உறுதி செய்தது.

***************



(Release ID: 1830089) Visitor Counter : 400