மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பம்
azadi ka amrit mahotsav

ஆதார் பகிர்வு பிரச்சனை குறித்து இந்திய தனித்துவ அடையாள ஆணையம் விளக்கம்

प्रविष्टि तिथि: 29 MAY 2022 2:07PM by PIB Chennai

இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின்  பெங்களூரு பிராந்திய அலுவலகம்  மே 27-ந்தேதி தேதி வெளியிட்ட செய்திக்குறிப்பையொட்டி இந்த விளக்கம் அளிக்கப்படுகிறது. 

போட்டோஷாப் செய்யப்பட்ட ஆதார் அட்டையை தவறாக பயன்படுத்த முயற்சித்த பின்னணியில் இது அவர்களால் வெளியிடப்பட்டதாக தெரியவந்துள்ளது. மக்கள் தங்கள் ஆதாரின் புகைப்பட நகலை எந்த நிறுவனத்துடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும், ஏனெனில் அது தவறாகப் பயன்படுத்தப்படலாம் என்றும் அந்த  வெளியீட்டில்  அறிவுறுத்தப்பட்டிருந்தது. அதற்கு மாற்றாக, ஆதார் எண்ணின் கடைசி 4 இலக்கங்களை மட்டுமே தெரியும் மறைக்கப்பட்ட (மாஸ்க்ட்) ஆதாரைப் பயன்படுத்தலாம் என்று அதில் கூறப்பட்டிருந்தது.

இருப்பினும், பத்திரிகை செய்தியை தவறாகப் புரிந்துகொள்வதற்கான சாத்தியக்கூறுகளைக் கருத்தில் கொண்டு, அது உடனடியாக அமலுக்கு வரும் வகையில் திரும்பப் பெறப்படுகிறது.

இந்திய தனித்துவ அடையாள ஆணையம் வழங்கிய ஆதார் அட்டை வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் எண்களைப் பயன்படுத்துவதிலும் பகிர்வதிலும் சாதாரண நடைமுறையைக் கடைப்பிடிக்க மட்டுமே அறிவுறுத்தப்படுகிறார்கள்.

ஆதார் அடையாள அங்கீகார சூழல் அமைப்பு ஆதார் வைத்திருப்பவரின் அடையாளம் மற்றும் தனியுரிமையைப் பாதுகாப்பதற்கு போதுமான அம்சங்களை வழங்கியுள்ளது.

***************


(रिलीज़ आईडी: 1829257) आगंतुक पटल : 668
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Odia , Telugu , Kannada