பிரதமர் அலுவலகம்

தமிழ்நாட்டில் ரூ.31,500 கோடி மதிப்பிலான 11 திட்டங்களை பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணித்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

Posted On: 26 MAY 2022 7:52PM by PIB Chennai

பிரதமர் திரு.நரேந்திரமோடிசென்னையில் ரூ.31,500கோடி மதிப்பிலான 11 திட்டங்களை நாட்டிற்கு அர்ப்பணித்துபுதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.  இந்தத் திட்டங்கள் கட்டமைப்பு வளர்ச்சிக்கு ஊக்கமளிப்பதோடுபோக்குவரத்து இணைப்பு வசதிகளை மேம்படுத்திஇப்பகுதியில்மக்களின் வாழ்க்கையை எளிதாக்குவதற்கு உத்வேகம் அளிக்கும்.   தமிழக ஆளுனர் திரு.ஆர்.என்.ரவிமுதலமைச்சர் திரு.மு..ஸ்டாலின்மத்திய அமைச்சர் திரு.எல்.முருகன் உள்ளிட்டோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்

நிகழ்ச்சியில் பேசிய பிரதமர்தமிழ்நாட்டிற்கு வந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாக தெரிவித்தார்.  "இந்த பூமி சிறப்புமிக்கது.  இந்த மாநிலத்தின் மக்கள்கலாச்சாரம் மற்றும் மொழி ஆகிய அனைத்தும் தலைசிறந்தவைஎன்றும் அவர் குறிப்பிட்டார்.   தமிழ்நாட்டைச் சேர்ந்த சிலர் அல்லது பலர் எப்போதும் சிறந்து விளங்குகின்றனர்.  காதுகேளாதோருக்கான ஒலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய அணியினரை சந்தித்ததை நினைவுகூர்ந்த அவர்,  "இம்முறைஇந்தப் போட்டியில் இந்தியா சிறப்பான திறமையை வெளிப்படுத்தியது.  நாம் வென்ற 16 பதக்கங்களில்தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞர்கள் மட்டும் 6 பதக்கங்களை வென்றுள்ளனர்".

 

வளமான தமிழ் கலாச்சாரம் குறித்து பேசிய பிரதமர், “ தமிழ்மொழி நிலைபேறுடையதுதமிழ் கலாச்சாரம் உலகளாவியதுசென்னையிலிருந்து கனடாவுக்கும்மதுரையிலிருந்து  மலேசியாவுக்கும்நாமக்கல்லிலிருந்து  நியூயார்க்கிற்கும்சேலத்திலிருந்து தென்னாப்பிரிக்கா வரையிலும் பிரசித்தி பெற்றதுபொங்கல் மற்றும் புத்தாண்டு விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றனஅண்மையில் கேன் திரைப்பட விழாவில் தமிழ்நாட்டு மண்ணின் மைந்தரான மத்திய அமைச்சர் திரு எல்முருகன் தமிழ்நாட்டு பாரம்பரிய உடையுடன் சிவப்புக் கம்பளத்தில் நடந்து வந்தது உலக முழுவதுமுள்ள  அனைத்து தமிழ் மக்களையும் பெருமைகொள்ளச் செய்தது என்று அவர் கூறினார்.

புதிதாக தொடங்கப்பட்ட அல்லது அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள், சாலை போக்குவரத்துக்கு உந்துதலாக இருக்கும் என்பது கண்கூடு என்று அவர் குறிப்பிட்டார்இது பொருளாதார வளர்ச்சியோடு நேரடித் தொடர்புடையதாகும்பெங்களூரு -சென்னை விரைவு பாதை இரண்டு பெரிய மையங்களை இணைக்கும் என்றும் சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலை இணைக்கும் மேல்மட்ட இரண்டடுக்கு நான்கு வழிச் சாலை மிகவும் பயனுடையதாகவும் நகரின் போக்குவரத்து நெரிசலை குறைப்பதாகவும் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்ஐந்து ரயில் நிலையங்கள் மறுமேம்பாடு செய்யப்படுவது குறித்து பிரதமர் தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்இந்த நவீன மயமாக்கலும் மேம்பாடும் எதிர்கால தேவைகளை மனதில்கொண்டு செய்யப்படுபவையாகும்அதே சமயம் இது உள்ளூர் கலையையும் கலாச்சாரத்தையும் இணைப்பதாக இருக்கும்மதுரை - தேனி இடையேயான அகல ரயில்பாதை திட்டம் விவசாயிகளுக்கு உதவும்,  அவர்களுக்கு புதிய சந்தைகளை வழங்கும்.

பிரதமரின் வீட்டுவசதி திட்டத்தின் கீழ் வரலாற்று சிறப்பு மிக்க சென்னையில் நவீன தொழில்நுட்பத்துடனான வீட்டு வசதி திட்டத்தின் ஒரு பகுதியாக வீடுகளை பெற்றுள்ள அனைவருக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார். “உலகளாவிய சவாலை நாம் தொடங்கியிருக்கும் நிலையில், இந்த திட்டம் மிகவும் திருப்தி அளிக்கிறது. மிகவும் குறைந்த காலத்தில் முதலாவது திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதுஅதுவும் சென்னையில் நடந்திருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கிறது” என்று அவர் கூறினார்.

நமது நாட்டின் சரக்குப் போக்குவரத்து முறையில், பல்முனை போக்குவரத்து பூங்காக்கள் புதிய முன்னுதாரணமாக இருக்கும் என்று பிரதமர் குறிப்பிட்டார்பல்வேறு துறைகளில் இத்தகையை திட்டங்கள் ஒவ்வொன்றும் வேலைவாய்ப்பையும் தற்சார்பு என்ற நமது தீர்மானத்தையும் ஊக்கப்படுத்தும் என்று அவர் கூறினார்.

உள்கட்டமைப்புக்கு அதிக அளவில் முக்கியத்துவம் கொடுத்த நாடுகள், வளரும் நாடுகள் பட்டியலில் இருந்து வளர்ந்த நாடுகள் என்ற இடத்துக்கு முன்னேறியதை வரலாறு நமக்கு கற்றுத் தந்துள்ளதாக பிரதமர் மோடி கூறினார். சிறந்த, தரம் வாய்ந்த மற்றும் நிலையான உள்கட்டமைப்பு திட்டங்களை செயல்படுத்துவதில் இந்திய அரசு முழுக்கவனம் எடுத்து செயல்பட்டு வருகிறது. இந்திய அரசு நிலம் மற்றும் கடலோரங்களில் உள்கட்டமைப்புகளை உருவாக்குவதில் தனிக்கவனம் செலுத்தி வருகிறது. ஏழைகள் நல்வாழ்வு திட்டத்தை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்திய அரசு, செயல்பட்டு வருகிறது. சமூக உள்கட்டமைப்பை உருவாக்குவதற்கு நாம் அளிக்கும் முக்கியத்துவம், நமது கொள்கையின் மீதான முக்கியத்துவத்தை குறிக்கிறது. முக்கியத் திட்டங்கள் முழுமை நிலையை எட்டுவதற்கு தனது அரசு இயங்கி வருகிறது.

கழிவறை வசதி, வீட்டு வசதி, பொருளாதாரம் உள்ளிட்ட எந்தவொரு துறையாக இருந்தாலும் முழுவளர்ச்சி என்ற இலக்கை நோக்கி நாங்கள் செயல்படுகிறோம். 

ஒருசில ஆண்டுகளுக்கு முன்புவரை உள்கட்டமைப்பு என்பதை சாலை, மின்சாரம், நீர் ஆகிய திட்டங்களை மேம்படுத்துவது என்பதை மட்டுமே கொண்டிருந்தது. தற்போது வழக்கமாக குறிப்பிடப்படும் உள்கட்டமைப்பு என்பதை கடந்து தமது அரசு சென்றுள்ளதாக பிரதமர் மோடி குறிப்பிட்டார். இன்று நாம் குழாய்வழி எரிவாயு இணைப்பு திட்டத்தை விரிவுபடுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறோம். அனைத்து கிராமங்களுக்கும் அதிவேக இணையதள சேவையை கொண்டு வருவதே எங்கள் நோக்கம்.

தமிழ்மொழி, மற்றும் கலாச்சாரத்தை பிரபலப்படுத்துவதில் தனது அரசு உறுதிபூண்டுள்ளதாக பிரதமர் மோடி வலியுறுத்தி  கூறினார். இந்த ஆண்டு தொடக்கத்தில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் புதிய கட்டிடம் சென்னையில் தொடங்கப்பட்டது. இது முழுவதும் மத்திய அரசின் நிதியுதவியால் கட்டப்பட்டுள்ளது. அண்மையில், பனாரஸ் இந்துப் பல்கலைக்கழகத்தில், தமிழ்மொழி ஆய்வுப் படிப்புகளுக்கான பாரதியார் இருக்கை நிறுவப்பட்டதையும் பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார். பனராஸ் பல்கலைக்கழகம் தமது தொகுதியில் இருப்பது தமக்கு கூடுதல் மகிழ்ச்சியளிக்கும் செய்தி என்று பிரதமர் கூறினார். இலங்கை தற்போது கடினமான காலங்களை நோக்கி பயணம் செய்து கொண்டிருப்பதாக தெரிவித்த பிரதமர் மோடி, அண்டை நாடான இலங்கைக்கு நட்பு அடிப்படையில் அனைத்து உதவிகளையும் தற்போது செய்து வருகிறது என்று தெரிவித்தார். யாழ்ப்பாணத்துக்கு சென்ற முதல் இந்திய பிரதமர் தாம் என்பதை பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார். இலங்கையில் உள்ள தமிழ் மக்களுக்கு கலாச்சாரம், சுகாதாரம், போக்குவரத்து, வீட்டுவசதி உள்ளிட்ட துறைகளில் உதவ பல்வேறு திட்டங்களை மேற்கொண்டு வருவதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.

 

விடுதலைப் பெருவிழாவின் போது நமது சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நிறைவேற்றுவதற்கான கூட்டு முயற்சியை மீண்டும் வலியுறுத்தி பிரதமர் தனது உரையை நிறைவு செய்தார்.

ரூ.2,960 கோடி மதிப்பில் முடிக்கப்பட்ட ஐந்து திட்டங்களை  பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.   மதுரை - தேனி இடையே 75 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.500 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள புதிய ரயில் வழித்தடத்தின் மூலம் வசதியான பயணம் அமைவதுடன் அப்பகுதி சுற்றுலாத்துறை வளர்ச்சியடையும். ரூ.590 கோடி செலவில்  தாம்பரம் – செங்கல்பட்டு இடையே  30 கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ள 3-வது ரயில்வே பாதை மூலம் அதிக அளவிலான புறநகர ரயில்சேவையை அளிக்க முடியும். இது பயணிகளுக்கு மேலும் வசதியை அளிக்கும். ரூ.850 கோடி செலவில் எண்ணூர் – செங்கல்பட்டு இடையே 115 கிலோமீட்டர் தொலைவிலும், ரூ.910 கோடி செலவில் திருவள்ளூர் – பெங்களூரு இடையே 271 கிலோமீட்டர்  தொலைவில் இயற்கை எரிவாயு குழாய் அமைக்கப்பட்டுள்ளது. இது நுகர்வோருக்கு இயற்கை எரிவாயு வசதியை அளிப்பதுடன் தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரப்பிரதேச மாநிலங்களின் தொழிற்சாலைகளும் பயனடையும்.

பிரதமரின் நகர்ப்புற வீட்டு வசதித் திட்டத்தின் கீழ், குறைந்த செலவில், நவீன வீடுகள் திட்டத்தின் மூலம் ரூ.116 கோடி மதிப்பில்  கட்டப்பட்டுள்ள 1,152 வீடுகளும் இந்நிகழ்ச்சியில்  திறந்து வைக்கப்பட்டது.

ரூ.28,540 கோடி மதிப்பில் கட்டப்படும்  6 திட்டங்களுக்கு பிரதமர் அடிக்கல் நாட்டினார்.  ரூ.14,870 கோடி செலவில்,  262 கிலோமீட்டர் தொலைவில் பெங்களூரு – சென்னை விரைவுச் சாலை அமைக்கப்பட உள்ளது. இது கர்நாடகா, ஆந்திரப்பிரதேசம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்கள் வழியே  செல்வதுடன்  பெங்களூரு – சென்னை இடையேயான  பயண நேரம் இரண்டு முதல் மூன்று மணி நேரம் குறையும். சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயலை இணைக்கும் வகையில்,  21 கிலோமீட்டர் தொலைவிற்கு நான்கு வழி இரண்டடுக்கு சாலை, ரூ.5,850 கோடி செலவில் கட்டப்பட உள்ளது. இது சரக்கு வாகனங்கள் சென்னை துறைமுகத்தை எந்நேரமும் அடைய வாய்ப்பு ஏற்படும்.

நெரலூரிலிருந்து - தர்மபுரி வரை 94 கிலோமீட்டர் தொலைவிற்கு, ரூ.3,870 கோடி செலவில் நான்கு வழிப்பாதையும், மீன்சுருட்டி முதல் சிதம்பரம் வரை  31 கிலோமீட்டர் தொலைவிற்கு ரூ.720 கோடி செலவில் இரண்டு வழிப்பாதையும் அமைக்கப்பட உள்ளது. இது அப்பகுதியில் தடையில்லா போக்குவரத்துக்கு வழி வகுக்கும்.

 சென்னை எழும்பூர், ராமேஸ்வரம், மதுரை, காட்பாடி, கன்னியாகுமரி ரயில் நிலையங்களை தரம் உயர்த்துவதற்கான பணிகளுக்கும் அடிக்கல் நாட்டப்பட்டது. ரூ.1,800 கோடி மதிப்பில்  நவீன  அமைப்புகளுடன் பயணிகளின் வசதிகளுக்காக இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.

சென்னையில், ரூ.1,430 கோடி மதிப்பில் பல்முனை நவீன சரக்கு போக்குவரத்து பூங்கா அமைப்பதற்கும் பிரதமர் அடிக்கல் நாட்டினார். இது தடையில்லா சரக்கு போக்குவரத்துக்கு வழி வகுக்கும் என்பதுடன் பல்வேறு பணிகளையும் மேற்கொள்ள முடியும்.  

 

***************



(Release ID: 1828598) Visitor Counter : 239