பாதுகாப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருடாந்தர அடையாளத்தை 2022 ஜுன் 25-க்குள் நிறைவு செய்யுமாறு பாதுகாப்புத்துறை ஓய்வூதியதாரர்கள் கேட்டு கொண்டுள்ளனர்

Posted On: 26 MAY 2022 2:00PM by PIB Chennai

பாதுகாப்புத்துறை ஓய்வூதியம் பெறுவோர் வருடாந்திர அடையாள சான்றிதழை ஒப்படைப்பதற்கான காலக்கெடுவை பாதுகாப்பு அமைச்சகம் ஜுன் 25-ம் தேதி வரை நீட்டித்து உள்ளது.

மே 25-ம் தேதி வரை பெறப்பட்ட தரவுகளின்படி, பழைய ஓய்வூதிய திட்டத்திலிருந்து புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறிய 34,636 ஓய்வூதியதாரர்கள் தங்களின் வருடாந்திர அடையாளத்தை, நவம்பர் 2021 வரை இணையதளம் அல்லது வங்கிகள் மூலமாக சமர்ப்பிக்கவில்லை என்று தெரிய வந்துள்ளது.

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு மாறிய 58,275 ஓய்வூதியதாரர்களின் வருடாந்தர அடையாள விவரங்களை வங்கிகளால் சரிபார்க்க முடியவில்லை. இதனால், அவர்களுக்கு சிறப்பு விலக்கு அளிக்கப்பட்டது.

ஆண்டு அடையாள, வாழ்க்கை சான்றிதழ் என்பது ஓய்வூதியம் பயனாளர்களுக்கு தொடர்ச்சியாகவும் மற்றும் சரியான நேரத்திலும் கிடைப்பதற்கான சட்டப்பூர்வ நடைமுறையாகும். எனவே, வருடாந்தர அடையாள, வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு ஜுன் 25-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

***************(Release ID: 1828568) Visitor Counter : 123