தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

மில்லியன் கணக்கானோர் அகில இந்திய வானொலியின் செய்திகளை டிஜிட்டல் தளங்களில் தொடர்கின்றனர்

प्रविष्टि तिथि: 25 MAY 2022 2:28PM by PIB Chennai

செய்தி ஊடகத்துறையில், அகில இந்திய வானொலியின் சமூக ஊடகத்தளங்கள் அனைவரிடமும் நம்பகத்தன்மையை ஏற்படுத்தி உள்ளதாக, ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அகில இந்திய வானொலியின் டுவிட்டர் செய்திகளை 3 மில்லியன் நபர்கள் பின்தொடர்கின்றனர். இது அகில இந்திய வானொலியின் செய்திகள் அடைந்துள்ள சாதனையின் மைல்கல்லாக இது உள்ளது.

மாறிவரும் காலச்சூழலுக்கு ஏற்றவாறு, அகில இந்திய வானொலியின் செய்திப்பிரிவு, பல்வேறு சமூக ஊடகத்தளங்களை விரிவுப்படுத்தி அதிகளவிலான, குறிப்பாக இளைய சமுதாயத்தினரையும் சென்றடைய செய்துள்ளது.

அகில இந்திய வானொலியின் செய்திகள் யூடியூப், செயலி, முகநூல், டுவிட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் தொடர்ந்து புதிய செய்திகளை பதிவிட்டு வருகிறது. இந்த தகவல்கள் அனைத்தும் ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இடம்பெற்றுள்ளது.

***************


(रिलीज़ आईडी: 1828229) आगंतुक पटल : 215
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi , Telugu , Kannada