தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

கேன் திரைப்பட விழாவில் இந்தியா: கள நிலவரங்களை ஒளிபரப்பும் டிடி இந்தியா

Posted On: 19 MAY 2022 12:46PM by PIB Chennai

கேன் திரைப்பட விழாவுடன் இணைவது திரைப்பட ரசிகர்களின் அதீத விருப்பம். இந்திய திரைப்பட ரசிகர்களுக்கு இது சிறந்த திரைப்பட பயணத்தின் வழக்கமான வாழ்க்கை அனுபவத்தைவிடவும் மிகப் பெரியது. இத்தகைய சிறப்புமிக்க விழா பற்றி உலகம் முழுவதும் உள்ள திரைப்படங்களின் பன்முகத்தன்மையை உணர்ந்து கொள்ளும் வகையில் இதனை தூர்தர்ஷனின் சர்வதேச தொலைக்காட்சியான டிடி இந்தியா இதன் பயணத்தை மக்களிடையே எடுத்துச் செல்கிறது. கேன் திருவிழாவை களத்திலிருந்து நேரடியாக ஒளிபரப்பும் ஒரே இந்திய செய்தி தொலைக்காட்சி என்ற பெருமையையும் டிடி இந்தியா பெற்றுள்ளது.

‘கேன் திருவிழாவில் இந்தியா’ (இந்தியா அட் கேன்) என்ற அரை மணி நேர நிகழ்ச்சி டிடி இந்தியா மற்றும் டிடி நியூஸ் தொலைக்காட்சிகளில் தினமும் ஒளிபரப்பாகிறது. கேன் விழாவின் ஆற்றல் மற்றும் உணர்ச்சிகள், அதிகரித்துவரும் சமீபத்திய போக்குகள், 21-ஆம் நூற்றாண்டில் திரைப்பட விழாக்களின் தொடர்பு உள்ளிட்ட பல்வேறு தலைசிறந்த அனுபவங்களை இந்த நிகழ்ச்சி எடுத்துரைக்கிறது. கருத்து முனையமாக இந்தியா செயல்படுவதையும் இது விளக்குகிறது. டிடி இந்தியாவில் ஒளிபரப்பப்படும் பிரபலங்களின் நேர்காணல்கள், அவர்களது வாழ்க்கை மற்றும் பணி பற்றிய சுவாரசியமான தகவல்களை வெளி உலகிற்கு தெரிவிக்கிறது.

இந்த ஆண்டு கேன் திரைப்பட விழாவில் அதிகாரபூர்வமான கவுரவ நாடாக இந்தியா பங்கேற்பதால் திரைப்பட விழாவுடன் பார்வையாளர்களை இணைக்கும் பணியை டிடி இந்தியா செய்து வருகிறது. உலகின் மிகப்பெரிய திரைப்படத் தயாரிப்பு நாடான இந்தியாவால் ஆய்வு செய்யப்பட வேண்டிய கதைகள் குறித்த சேகர் கபூரின் கருத்துகள், உலகின் கருத்து முனையமாக மாறுவதற்கு ஏற்ற இந்தியாவின் அபரிமிதமான திறன் பற்றி நவாசுதின் சிதுக்கியின் பேச்சு மற்றும் விழாவின் உற்சாகமான ஆற்றல் குறித்த கிராமி விருது வென்ற ரிக்கி கேஜ்ஜின் கருத்து முதலியவை களத்தில் கலகலப்பான அட்டைகளுடன் திரையில் ஒளிபரப்பப்படுகின்றன.

இந்தியா அட் கேன் நிகழ்ச்சி டிடி இந்தியா தொலைக்காட்சியில் தினமும் இரவு 10 மணிக்கும், டிடி நியூஸ் தொலைக்காட்சியில் இரவு 10:30 மணிக்கும் ஒளிபரப்பாகும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கிலசெய்திக் குறிப்பைக் காணவும்:

https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1826625

***************



(Release ID: 1826663) Visitor Counter : 123