பிரதமர் அலுவலகம்
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு பிரதமர் இரங்கல்
இடுகை இடப்பட்ட நாள்:
13 MAY 2022 6:14PM by PIB Chennai
ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். அவர் ஒரு சிறந்த அரசியல் நிபுணர் என்றும், தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவர் என்றும், அவரது தலைமையின் கீழ் இந்தியா-ஐக்கிய அரபு அமீரக உறவுகள் மேம்பட்டது என்றும் பிரதமர் கூறியுள்ளார்.
பிரதமர் தமது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது;
" ஷேக் கலீஃபா பின் சயீத் மறைவு குறித்து அறிந்து நான் மிகவும் வருத்தமடைந்தேன். அவர் ஒரு சிறந்த அரசியல்வாதி மற்றும் தொலைநோக்குப் பார்வை கொண்ட தலைவராக இருந்தார். அவரது தலைமையின் கீழ் இந்தியா-யுஏஇ உறவுகள் முன்னேற்றமடைந்தது. ஐக்கிய அரபு அமீரக மக்களுக்கு இந்திய மக்களின் இதயப்பூர்வமான இரங்கல்கள். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்."
***************
(வெளியீட்டு அடையாள எண்: 1825179)
வருகையாளர் எண்ணிக்கை : 201
இந்த வெளியீட்டை படிக்க:
English
,
Urdu
,
हिन्दी
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam