சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்
பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா உடன்படிக்கை நாடுகளின் 15-வது கூட்டம்: அபித்ஜான் சென்றடைந்தது மத்திய அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் தலைமையிலான இந்திய குழு
Posted On:
10 MAY 2022 10:16AM by PIB Chennai
மே 9 முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா உடன்படிக்கை நாடுகளின் 15-வது கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்துறை அமைச்சர் திரு புபேந்தர் யாதவ் தலைமையிலான இந்திய பிரதிநிதிகள் குழு அபித்ஜான் சென்றடைந்தது. நாடுகளின் தலைவர்கள் அளவிலான உச்சிமாநாடு உள்ளிட்ட உயர்நிலை கூட்டங்களில் அமைச்சர் உரையாற்றவிருக்கிறார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா உடன்படிக்கை நாடுகளின் 14-வது அமர்வை புதுதில்லியில் நடத்தியிருந்ததுடன், இதன் தற்போதைய தலைவராகவும் இந்தியா செயல்படுகிறது.
ஐ.நா உடன்படிக்கை நாடுகளின் 14-வது அமர்வில் பேசிய பிரதமர் திரு நரேந்திர மோடி, “21 மில்லியன் ஹெக்டேரிலிருந்து 26 மில்லியன் ஹெக்டேர் அளவிலான தரிசு நிலங்களை தற்போது முதல் 2030-ஆம் ஆண்டுக்குள் இந்தியா மீட்டெடுக்கும்”, என்று அறிவித்தார். கொவிட் பெருந்தொற்றுக்கு இடையேயும், இந்தியா தலைவராக இருந்தபோது, நிலச் சீரழிவை தடுத்து நிறுத்தும் மற்றும் மாற்றியமைக்கும் சர்வதேச இலக்கை நோக்கி நாடுகளை ஒன்றிணைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்கியது.
அரசுகள், தனியார் துறை, பொது சமூகத்தின் தலைவர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள இதர பங்குதாரர்களை ஒன்றிணைத்து, எதிர்கால நிலையான நிர்வாகத்தில் முன்னேற்றத்தை உண்டாக்கும் நிலம் மற்றும் பிற முக்கிய நிலைத்தன்மை சிக்கல்களுக்கு இடையிலான தொடர்புகளை பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான ஐ.நா உடன்படிக்கை நாடுகளின் 15-வது அமர்வு, ஆராயும்.
மேலும் விவரங்களுக்கு இந்த செய்திக் குறிப்பை ஆங்கிலத்தில் இங்கே காணலாம்: https://www.pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1824035
***************
(Release ID: 1824141)
Visitor Counter : 213