பிரதமர் அலுவலகம்

ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பின் ஜிடோ கனெக்ட் 2022 தொடக்க அமர்வில் பிரதமர் நிகழ்த்திய உரையின் தமிழாக்கம்

Posted On: 06 MAY 2022 1:58PM by PIB Chennai

வணக்கம்!

ஜிடோ கனெக்ட்  உச்சி மாநாடு சுதந்திரத்தின்  75-வது  ஆண்டில் நடைபெறுகிறது. இப்போதிலிருந்து சுதந்திரத்தின் அமிர்த காலத்தில் நாடு நுழைகிறது. அடுத்த 25 ஆண்டுகளில் பொன்னான இந்தியாவை கட்டமைக்க நாடு தீர்மானித்துள்ளது. எனவே, இந்த உச்சிமாநாட்டின் மையப் பொருளாக ஒருங்கிணைதல், முன்னேற்றம், எதிர்காலம் என்பது மிகவும் பொருத்தமாகவே, முடிவு செய்யப்பட்டுள்ளது.  இது அனைவரின் முயற்சி என்ற உணர்வுடையதாக இருக்கிறது என்று நான் கூறுவேன். இது தான் சுதந்திரத்தின் அமிர்த காலத்தில்  விரைந்த வளர்ச்சிக்கான மந்திரமாகும். இந்த உச்சிமாநாடு இந்த உணர்வை தொடர்ந்து வலுப்படுத்தட்டும். இந்த உச்சிமாநாட்டின் போது நமது தற்போதைய எதிர்கால முன்னுரிமைகள் சவால்களுக்கு தீர்வு காண முயற்சிகள் இருக்கும்.   உங்கள் அனைவருக்கும் நல்வாழ்த்துக்கள்!

நண்பர்களே!

பலமுறை உங்களை நேராக சந்திக்கும் வாய்ப்பை நான் பெற்றிருக்கிறேன்.  அந்த சந்திப்புகளால் நான் மகிழ்ச்சி அடைந்திருக்கிறேன். இந்த முறை  உங்களை நான் இணையம் வழியாக சந்திக்கிறேன்.

நண்பர்களே!

உலகின் எந்தப் பகுதியிலும்  இந்தியாவின் எந்த மூலையிலும் உள்ள இந்தியர்கள் இப்போது பெருமித உணர்வு கொண்டிருக்கிறார்கள். எங்களின் தன்னம்பிக்கையும், புதிய சக்தியை அளித்துள்ளது. அதிலிருந்து ஊக்கம் பெற்றுள்ளோம்.  இந்தியாவின் வளர்ச்சிக்கான தீர்மானங்கள் அதன் இலக்குகளை எட்டுவதற்கான வழிமுறைகள் என்று இப்போது உலகம் கருதுகிறது. உலகளாவிய சமாதானம். உலகளாவிய வளம், உலகளாவிய சவால்களுக்கு தீர்வுகள் அல்லது உலகளாவிய வழங்கல் தொடருக்கு அதிகாரம் என எதுவாக இருந்தாலும், குறிப்பிடத்தக்க நம்பிக்கையுடன், உலகம் இந்தியாவை எதிர்நோக்கி இருக்கிறது.

நண்பர்களே!

தற்போது எவ்வளவு முடியுமோ அவ்வளவுக்கு நாடு திறனை, வர்த்தகத்தை, தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்துகிறது.   இன்று நாடு குறிப்பாக இளைஞர்கள், ஒவ்வொரு நாளும் பத்துக்கும் அதிகமான புதிய தொழில்கள் பதிவு செய்யப்படுவதற்காக பெருமிதம் கொள்ளலாம். ஒவ்வொரு வாரமும், ஒரு யூனிகார்ன் உருவாகிறது. இன்று இந்தியாவின் வரிவிதிப்பு முறை முகதெரியாததாக, வெளிப்படைத்தன்மை கொண்டதாக இணைய வழியை பயன்படுத்துவதாக உள்ளது. மேலும், ஒரே நாடு, ஒரே வரி என்பதையும் கொண்டிருக்கிறது.  நாட்டில் செயல்படுத்தப்படும் பல லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள், பொருள் உற்பத்தியை அதிகப்படுத்தியுள்ளன.

நண்பர்களே!

வணிகம் என்பது உங்களுக்கு இயற்கையானதாக உங்களின் கலாச்சாரமாக இருக்கிறது. இந்திய அரசின் இ-சந்தை இணையப்பக்கத்தை ஒரு முறை பார்வையிட்டு அரசு கொள்முதலை ஊக்கப்படுத்த ஆலோசனைகளை தெரிவிக்குமாறு ஜிடோ உறுப்பினர்களும், உலகம் முழுவதும் உள்ள இந்தியர்களையும், நான் வலியுறுத்துகிறேன். 40 லட்சத்துக்கும் அதிகமான வியாபாரிகள் இ-சந்தை இணையப்பக்கத்தில் தாங்களாகவே பதிவு செய்துள்ளனர். கடந்த 5 மாதங்களில் மட்டும் இந்த இணையப் பக்கத்தில் பத்து லட்சம் வியாபாரிகள் இணைந்துள்ளனர் என்பதை அறிய நீங்கள் மகிழ்ச்சி அடைவீர்கள். புதிய நடைமுறையில் மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை இது காட்டுகிறது. அரசிடம் மன உறுதி இருந்தால், மக்களின் ஆதரவு அதற்கு இருக்கும் என்பதையும், இது வெளிப்படுத்துகிறது. மாற்றத்தை எவராலும் தடுக்க முடியாது. மாற்றம் சாத்தியமே என்று நாங்கள் அந்த மாற்றங்களை காணமுடிகிறது.

நண்பர்களே!

உங்களைப் போலவே நானும் வளர்ந்து வந்திருப்பதால் உங்களின இயல்பை நான் அறிவேன். எனவே, ஜெயின் சமூக இனம் தொழில் நிறுவனர்களையும், புதிய கண்டுபிடிப்பாளர்களையும், சற்று கூடுதல் பொறுப்பை ஏற்குமாறு நான் வலியுறுத்துகிறேன். ஒரு அமைப்பு என்ற முறையில் ஜெயின் சர்வதேச வர்த்தக அமைப்பிலிருந்து, சுதந்திரத்தின் 75-வது ஆண்டுப் பெருவிழா காலத்தில் அதன் உறுப்பினர்களிடமிருந்து எதிர்பார்ப்புகளைக் கொண்டிருப்பது மிகவும் இயல்பானது. கல்வி, சுகாதாரம், சிறிய நல்வாழ்வு நிறுவனங்கள் என எதுவாக இருந்தாலும், ஜெயின் சமூகம், சிறப்பான நிறுவனங்களை, சிறந்த நடைமுறைகளை, சிறந்த சேவைகளை எப்போதும் ஊக்கப்படுத்தியுள்ளது எனவே, உங்களிடமிருந்து சமூகத்தின் எதிர்பார்ப்புகள் இயல்பானதாகும். உங்களிடமிருந்து நான் சிறப்பு எதிர்பார்ப்பை கொண்டிருக்கிறேன். நீங்கள் உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிக்கிறீர்கள். எனவே, உள்ளூர் பொருட்களுக்கு ஆதரவு என்ற மந்திரத்தைப் பின்பற்றி ஏற்றுமதிக்கு புதிய வழிவகைகளை நீங்கள் காணவேண்டும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823211

-----



(Release ID: 1823931) Visitor Counter : 120