இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

4வது கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டியில் இந்தியா முழுவதிலும் இருந்து 8500 வீரர்கள் பங்கேற்பார்கள்: மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர்

Posted On: 07 MAY 2022 4:23PM by PIB Chennai

4வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியில் நாடு முழுவதிலும் இருந்து 8500 வீரர்கள்  பங்கேற்பார்கள் என கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு 2021க்கான லோகோ, கீதம், ஜெர்சி மற்றும் சின்னம் ஆகியவற்றை பஞ்ச்குலாவில் உள்ள இந்திரதனுஷ் ஆடிட்டோரியத்தில் இன்று வெளியிடும் போது,   மத்திய இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் இவ்வாறு கூறினார்.

நாட்டின் மக்கள்தொகையில் வெறும் 2% மட்டுமே உள்ள ஹரியானா, பெரும்பாலான விளையாட்டு நிகழ்வுகளில் அதிக பதக்கங்களை வென்றுள்ளது என்றும் அமைச்சர் கூறினார்.

இந்த நிகழ்ச்சியில், ஹரியானா முதல்வர் திரு. மனோகர் லால், ஹரியானா துணை முதல்வர் திரு. துஷ்யந்த் சௌதாலா, ஹரியானா சட்டமன்ற சபாநாயகர் திரு கியான் சந்த் குப்தா, ஹரியானா விளையாட்டு அமைச்சர் திரு. சந்தீப் சிங், மத்திய ஜல் சக்தி துறை இணையமைச்சர் திரு. ரத்தன் லால் கட்டாரியா மற்றும் ஹரியானா தலைமைச் செயலாளர் திரு. சஞ்சீவ் கௌஷலும் கலந்து கொண்டார்.

 பாரம்பரிய விளையாட்டுகளைப் பாதுகாக்க வலியுறுத்தும் வகையில் கட்கா, களரிபயட்டு, தங்-டா, மல்லகம்பா மற்றும் யோகாசனம் ஆகிய ஐந்து பாரம்பரிய விளையாட்டுகள் வரவிருக்கும் கேலோ இந்தியா போட்டிகளின் ஒரு பகுதியாக இருக்கும் எனவும், சமீபத்தில் முடிவடைந்த கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டி நிச்சயமாக இளைஞர்களை எதிர்காலத்தில் பெரிய இலக்குகளை நோக்கிச் செல்ல ஊக்குவிக்கும். விளையாட்டு வீரர்கள் சிறந்து விளங்கும் முயற்சியில் இந்திய அரசு உறுதியாக உள்ளது எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு மாநிலமே தயாராகி வருவதாகக் கூறிய ஹரியானா முதல்வர் திரு. மனோகர் லால், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகளை ஹரியானாவில் நடத்துவதற்கு வாய்ப்பளித்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்தார். 

ஜெயா' என்ற கரும்புலியும், 'விஜய்' புலியும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டியின் சின்னங்கள். இந்த போட்டிகளுக்கான ஹரியானாவின் சின்னத்திற்கு 'தாகத்' என பெயரிடப்பட்டுள்ளது. 4 வது கேலோ இந்திய இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் ஜூன் 4 முதல் ஜூன் 13 வரை ஹரியானாவில் நடைபெற உள்ளது.

****

 


(Release ID: 1823519) Visitor Counter : 457