நிதி அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வருவாய் பற்றாக்குறை மானியமாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடி விடுவிக்கப்பட்டுள்ளது

Posted On: 06 MAY 2022 4:30PM by PIB Chennai

அதிகாரப் பகிர்வுக்கு பிந்தைய வருவாய் பற்றாக்குறை மானியத்தை 2-வது தவணையாக 14 மாநிலங்களுக்கு ரூ.7,183.42 கோடியை மத்திய நிதியமைச்சகத்தின் செலவினத்துறை வெள்ளியன்று விடுவித்தது. 15-வது நிதி ஆணைய பரிந்துரைகளின்படி, இந்த மானியம் விடுவிக்கப்பட்டது.

2022-23-ம் நிதியாண்டிற்கு ஆந்திரப்பிரதேசம், அசாம், இமாச்சலப்பிரதேசம் உள்ளிட்ட 14 மாநிலங்களுக்கு அதிகாரப்பகிர்வுக்கு பிந்தையை வருவாய் பற்றாக்குறை மானியமாக மொத்தம் ரூ.86,201 கோடி விடுவிக்க 15-வது நிதி ஆணையம் பரிந்துரைத்தது. இந்தத் தொகை சமமான 12 மாத தவணைகளில்  விடுவிக்கப்படுகிறது. தற்போது விடுவிக்கப்பட்ட தொகையுடன் இதுவரை ரூ.14,366.84 கோடி  விடுவிக்கப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1823254

------


(Release ID: 1823310) Visitor Counter : 212