தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் டிடி ஸ்போர்ட்ஸ் சேனலில் நேரலையாக ஒளிபரப்பாகிறது
प्रविष्टि तिथि:
23 APR 2022 11:30AM by PIB Chennai
இந்திய விளையாட்டு ரசிகர்களுக்கு ஒரு நற்செய்தி. கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகள் 2021-ஐ நாளை முதல் டிடி ஸ்போர்ட்ஸ் சேனல் நேரலையாக ஒளிபரப்பவிருக்கிறது. இதனை தொலைக்காட்சிகளில் மட்டுமல்லாமல் கைபேசி வழியாகவும் காணலாம்.
கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகளின் ஒரு பகுதியாக, 2020 –ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட கேலோ இந்தியா பல்கலைக்கழக விளையாட்டுப் போட்டிகளின் இரண்டாவது தொடர் ஏப்ரல் 24 முதல் மே 3-ம்தேதி வரை நடைபெறிகிறது. இதற்கான தொடக்க விழா நாளையும், நிறைவு விழா மே 3-ந்தேதியும் நடைபெறவுள்ளது.
இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஒத்துழைப்புடன் டிடி ஸ்போர்ட்ஸ் விரிவான ஒளிபரப்புக்கு ஏற்பாடுகளைச் செய்துள்ளது. நாடு முழுவதிலும் உள்ள 175 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த 3800-க்கும் மேற்பட்ட தடகள வீரர்கள் இதில் பங்கேற்கின்றனர்.தடகளம், வாலிபால், நீச்சல், கூடைப்பந்து, பளுதூக்குதல், மல்யுத்தம், கபடி, கராத்தே, யோகாசனா ஆகியவை நேரலையாக ஒளிபரப்பாகும். ஜூடோ, டென்னிஸ், வில்வித்தை, வாள்சண்டை, கால்பந்து, டேபிள் ன்னிஸ், பாட்மின்டன், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல், குத்துச்சண்டை ஆகியவை பதிவு செய்யப்பட்டு ஒளிபரப்பப்படும். பிரசார் பாரதி யுடியூப் சேனலிலும் இது ஒரே நேரத்தில் ஒளிபரப்பாகும்.
விளையாட்டுப் போட்டிகள் டிடி ஸ்போர்ட்சில் ஒவ்வொரு நாளும் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை ஒளிபரப்பாகும். இதனைத் தொடர்ந்து அரை மணி நேர ஹைலட்ஸ் ஒளிபரப்பாகும்.
மேலும் கூடுதல் தகவல்களுக்கு இந்த ஆங்கில செய்திக்குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819200
--------
(रिलीज़ आईडी: 1819252)
आगंतुक पटल : 163