ஆயுஷ்
உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டில் முக்கிய ஆயுஷ் பிரிவுகளில் ரூ.9,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள உத்தரவாத கடிதம் பெறப்பட்டுள்ளது
Posted On:
22 APR 2022 5:31PM by PIB Chennai
குஜராத்தின் காந்தி நகரில் நடைபெற்ற இந்தியாவின் முதலாவது, உலகளாவிய ஆயுஷ் முதலீடு மற்றும் புதுமைக் கண்டுபிடிப்பு மாநாட்டில் முக்கிய ஆயுஷ் பிரிவுகளான, வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள், மருத்துவ மதிப்பு பயணம் (இந்தியாவில் குணமடைதல்), மருந்து பொருட்கள், தொழில்நுட்பம் & நோய் கண்டறிதல் மற்றும் விவசாயிகள் & வேளாண்மை உள்ளிட்ட முக்கிய பிரிவுகளில் ரூ.9,000 கோடிக்கும் மேல் மதிப்புள்ள உத்தரவாத கடிதம் பெறப்பட்டு, வரலாறு படைக்கப்பட்டுள்ளது.
ஆயுஷ் துறையில் இதுவரை இல்லாதவகையில் நடத்தப்பட்ட இந்த மாபெரும் நிகழ்ச்சியில், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான நிறுவனங்கள் மற்றும் பிற துறைகளுடன் மேற்கொள்ளப்பட்டுள்ள ஒப்பந்தங்கள், ஆயுஷ் துறையை உலகளவில் பிரபலப்படுத்தும் வகையில், பரஸ்பர ஆராய்ச்சி மற்றும் நிதி பரிசீலனைகளுக்கு வழிவகுக்கும்.
வேகமாக விற்பனையாகும் நுகர்வோர் பொருட்கள் துறையில் ரூ.7,000 கோடிக்கு அதிகமாகவும் மருத்துவ மதிப்பு பயணத்துறையில் சுமார் 1000 கோடி அளவுக்கும், மருந்து துறையில் ரூ.345 கோடிக்கும், விவசாயிகள் வேளாண்மைத்துறையில் ரூ.300 கோடி அளவுக்கும், தொழில்நுட்பம் மற்றும் நோய் கண்டறியும் துறையில் ரூ.60 கோடி அளவுக்கும் முதலீடுகள் செய்ய உத்தரவாதம் கிடைக்கப் பெற்றுள்ளது.
20 ஏப்ரல் 2022 அன்று நடைபெற்ற தொடக்க நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி முன்னிலையில் இந்த 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாயின.
மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கிலச் செய்திக் குறிப்பை காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1819049
***************
(Release ID: 1819087)
Visitor Counter : 251