சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
குறைபாடுடைய அனைத்து மின்சார வாகனங்களையும் திரும்பப் பெற்றுக் கொள்வதற்கான பணிகளை சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே நடவடிக்கை எடுப்பதுடன், சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகளை வகுக்க நிபுணர் குழுவை அமைக்குமாறும் திரு நிதின் கட்கரி கேட்டுக் கொண்டுள்ளார்
Posted On:
22 APR 2022 11:45AM by PIB Chennai
கடந்த இரண்டு மாதங்களில் பல்வேறு மின்சார இருசக்கர வாகன விபத்துக்கள் நடந்திருப்பது தெரியவந்துள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் திரு நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். இதில் மக்கள் சிலர் தங்களது உயிரை இழந்திருப்பதும், இந்த விபத்துக்களில் பலர் காயமடைந்திருப்பதும் மிகவும் துரதிர்ஷ்டவசமானது. திரு நிதின் கட்கரி வியாழன் அன்று டுவிட்டரில் வெளியிட்டுள்ள தொடர் பதிவுகளில், குறைபாடு உடைய அனைத்து வாகனங்களையும் உடனடியாக திரும்பப் பெறுவதற்கான பணிகளை, சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் முன்கூட்டியே மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இதுபோன்ற சம்பவங்கள் குறித்து விசாரிக்கவும், இப்பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும் குழு ஒன்றை அமைக்க வேண்டும் எனவும் மத்திய அமைச்சர் தெரிவித்துள்ளார். தகவல்களின் அடிப்படையில், குறைபாடு உடைய வாகனங்களை தயாரித்த நிறுவனங்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், மின்சார வாகனங்களுக்கான தரம் சார்ந்த வழிகாட்டி நெறிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.
எந்தஒரு நிறுவனமாவது அதன் நடைமுறைகளில் கவனக்குறைவாக இருப்பது தெரிய வந்தால், பெருந்தொகை அபராதமாக விதிக்கப்படுவதுடன், குறைபாடு உடைய அனைத்து வாகனங்களையும் திரும்பப் பெற உத்தரவிடப்படும் என்றும் திரு கட்கரி தெரிவித்துள்ளார்.
***************
(Release ID: 1818908)
(Release ID: 1818961)
Visitor Counter : 173