மத்திய அமைச்சரவை

நிலக்கரி சுரங்கப்பகுதி சட்டம் 1957-ன் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயன்படுத்துவதற்கான கொள்கைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


இந்த மாற்றங்கள், சுரங்கம் தோண்டப்படாத நிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும், நிலக்கரி மற்றும் எரிசக்தித் திட்டங்கள் தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்கவும் வகை செய்யும்

Posted On: 13 APR 2022 3:26PM by PIB Chennai

தாதுக்கள் வெட்டி எடுக்கப்பட்ட அல்லது நிலக்கரி சுரங்கம் தோண்டுவதற்கு நடைமுறை சாத்தியமற்ற நிலங்களை பயன்படுத்தும் நோக்கிலும், முதலீடுகளை அதிகரித்து நிலக்கரித் துறையில் வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கிலும், நிலக்கரி சுரங்கப்பகுதி சட்டம் 1957-ன் கீழ் கையகப்படுத்தப்பட்ட நிலத்தை பயன்படுத்துவதற்கான கொள்கைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.  இந்த கொள்கைசுரங்கம் தோண்டப்படாத நிலத்தில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளவும்நிலக்கரி மற்றும் எரிசக்தித் திட்டங்கள் தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்கவும் வகை செய்யும்.

நிலக்கரி சுரங்கம் அமைந்துள்ள பகுதிகளை வில்லங்கங்களிலிருந்து விடுவிக்க இந்த சட்டம் வகை செய்கிறது. 

கோல் இண்டியா நிறுவனம் போன்ற அரசின் நிலக்கரி நிறுவனங்கள் மற்றும் அவற்றின் துணை நிறுவனங்கள், தொடர்ந்து இந்த நிலங்களின் உரிமையாளர்களாக இருந்தாலும், குறிப்பிட்ட சில நோக்கங்களுக்காக அந்த நிலத்தை குத்தகைக்கு விடுவதற்கு மட்டுமே இந்த கொள்கை வழிவகுக்கிறது.  எனினும், நிலக்கரி மற்றும் எரிசக்தி சார்ந்த கட்டமைப்பு வளர்ச்சித் திட்டங்களில், கூட்டு முயற்சியாக மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தனியார் முதலீட்டை அனுமதிக்கவும் வகை செய்யப்பட்டுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பை காணவும்.. https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1816361

***************



(Release ID: 1816518) Visitor Counter : 198