உள்துறை அமைச்சகம்

குஜராத் மாநிலம் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நாடாபெட்டில் சீமா தரிசனத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா கட்டமைப்பு வசதிகளை மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் திரு அமித் ஷா இன்று திறந்து வைத்தார்


நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து, உலகின் அனைத்து துறைகளிலும் தேசத்தை மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான முறையான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன

Posted On: 10 APR 2022 6:55PM by PIB Chennai

மத்திய உள்துறை மற்றும் கூட்டுறவுத்துறை  அமைச்சர் திரு அமித் ஷா இன்று குஜராத்தின் பனஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள நாடாபெட்டில் சீமா தரிசனத்திற்காக புதிதாக கட்டப்பட்டுள்ள சுற்றுலா வசதிகளை திறந்து வைத்தார்.நடபெட் எல்லைப் புறக்காவல் நிலையத்தில் உரையாற்றிய அவர், சைனிக் சம்மேளனந்த் ஜவான்களுடன் கலந்துரையாடினார். இந்த நிகழ்ச்சியில் குஜராத் முதல்வர் திரு பூபேந்திர படேல் மற்றும் எல்லைப் பாதுகாப்புப் படையின் தலைமை இயக்குனர்  (பிஎஸ்எஃப்) உட்பட உயரதிகாரிகள் பலர்  கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் , எந்தவொரு எல்லைப் பாதுகாப்பு அமைப்பின், குறிப்பாக BSF பணிகள் மிகவும் கடினமானவை என்று கூறினார். எல்லை பாதுகாப்புப் படை வீரர்கள் நாட்டின் 6,385 கிமீ நீளமுள்ள  எல்லைகளை பாதுகாக்கும்  பணியில் ஈடுபட்டுள்ளனர். புழுதிபுயல், கொளுத்தும் வெய்யில் மற்றும் கடும் குளிருக்கு மத்தியில் கவனமுடன் வாழ்நாள் முழுவதும் கடமையாற்றி வருவதாக கூறினார். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றதில் இருந்து, நாட்டை அனைத்து துறைகளிலும் மிக உயர்ந்த நிலைக்கு கொண்டு செல்வதற்கான முயற்சிகள் முறையாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார். எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் நமது எல்லைகளை எவரும் ஊடுருவ முடியாத  வகையில்  பாதுகாத்து வருவதால், அரசின்  முயற்சிகள் வெற்றி பெறும் என்றார். எல்லை பாதுகாப்புப் படை  மற்றும் ராணுவ வீரர்கள் சிறப்பான வீரத்தை வெளிப்படுத்திய எல்லை பகுதி இது என்று அவர் கூறினார்.போரில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் பாகிஸ்தானில் இருந்து சுமார் 1,000 சதுர கிலோமீட்டர் பரப்பை அபகரித்து வெற்றி பெற்றதாக அவர் கூறினார். 1965-ம் ஆண்டில் 25 பட்டாலியன்களுடன் ஆரம்பித்து, இன்று 193 பட்டாலியன்கள் மற்றும் 60 பீரங்கி படைப்பிரிவுகளுடன் 2,65,000 பணியாளர்கள் கொண்ட படையாக உருவெடுத்துள்ளதாகவும், மிக நீண்ட காலமாக, ஒரு தீர்வு எட்டப்படும் வரை, நிர்வாகம் மற்றும் அமைப்பு ரீதியான நடவடிக்கைளில்  ல்லை பாதுகாப்புப் படைஈடுபட்டுள்ளது.  2,65,000 வீரர்களைக் கொண்ட படையாக உள்ள இந்த அமைப்பு நமது பாதுகாப்பிற்கு உத்தரவாதம் அளிப்பதாக நாடும் அதன் குடிமக்களும் நம்புவதாக அமித் ஷா தெரிவித்தார்.

காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ஊடுருவல் தடுத்து நிறுத்தப்பட வேண்டும் , வடகிழக்கு மற்றும் சில இடதுசாரி தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்நாட்டுப் பாதுகாப்பு பராமரிக்கப்பட வேண்டும், அதே நேரத்தில் இந்தியா-வங்காளதேச நாடுகளின் சர்வதேச எல்லையில் இரு நாடுகளுக்கு இடையிலான உறவுகளில் நல்லுறவைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மத்திய உள்துறை அமைச்சர் கூறினார். பாதுகாப்பு பராமரிக்கப்பட வேண்டும், சிற்றோடையின் கடினமான பகுதியில் கூட, இதுபோன்ற கடினமான சூழ்நிலைகளில் பணிபுரியும் எல்லை பாதுகாப்புப் படை வீரர்களைத்  தவிர வேறு எந்த எல்லைக் காவல் படையும் இருக்காது என்றார்.

நாடாபெட்டில் சீமதர்ஷன் திட்டத்திற்காக 125 கோடி ரூபாயை குஜராத் மாநில அரசு செலவு செய்துள்ளதாக திரு அமித் ஷா, தெரிவித்தார். நமது எல்லைப் பாதுகாப்புப் படைக்கு மரியாதை செலுத்தும் உணர்வை குழந்தைகள் உள்வாங்கி கொள்ள வேண்டும், இங்குள்ள எல்லை பாதுகாப்புப் படை வீரர்களின்  வீரத்தை நேரில் பார்த்த பிறகு அவர்கள் நாட்டின் பாதுகாப்பிற்கு பங்களிப்பது என்று முடிவு செய்ய வேண்டும் என்றார். இப்போது குஜராத் மாநில அரசும் 5 முதல் 8 ஆம் வகுப்பு வரை படிக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் சுற்றுலாவின் மையமாக Ndabet இருக்க  வேண்டும் என்று திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

இதன் மூலம், எல்லை பாதுகாப்புப் படையினரின் தியாகம், அர்ப்பணிப்புமற்றும் வீரம் ஆகியவை குறித்த  செய்திகள் மக்கள் மற்றும்  சமூகத்தை சென்றடையும் என்றும், குழந்தைகள் வளரும்போது, இந்த மரியாதை அவர்கள் வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் வசதிக்காகவும்குஜராத் மாநில அரசு திட்டமிட்டு வருகிறது, குஜராத்தில் உள்ள ஒவ்வொரு நபரும் பனஸ்கந்தாவின் புறநகரில் குறைந்தது 2 நாட்கள் செலவிடுகிறார்கள் என்று கூறினார். அப்போதுதான் அவர்களால் எல்லைப் பகுதிகளின் சிரமங்களைப் புரிந்து கொள்ள முடியும் என்றும் அமித் ஷா தெரிவித்தார்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815446

***************



(Release ID: 1815482) Visitor Counter : 215