பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம்

விடுதலைப் பெருவிழாவையொட்டி மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் ஏப்ரல் 11 முதல் 17-ந் தேதி வரை சிறப்பு வாராந்திர விழாவாக கொண்டாடவுள்ளது

Posted On: 09 APR 2022 12:27PM by PIB Chennai

விடுதலைப் பெருவிழாவையொட்டி மத்திய பஞ்சாயத் ராஜ் அமைச்சகம் ஏப்ரல் 11 முதல் 17-ந் தேதி வரை சிறப்பு வாராந்திர விழாவாக கொண்டாடவுள்ளது. இதில் 7 தேசிய மாநாடுகள் நடைபெற உள்ளன.  பஞ்சாயத் ராஜ் மூலமாக நீடித்த வளர்ச்சியை அடையும் வகையில் அனைத்து பிரதிநிதிகளின் கருத்துக்கள், சிந்தனைகள் தயார் நிலை, சிறந்த அனுபவங்கள் ஆகியவற்றை எடுத்துக்காட்டும் வகையில் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  ஏப்ரல் 11-ந் தேதி புதுதில்லியில் நடைபெறவுள்ள மாநாட்டில் குடியரசு துணைத் தலைவர்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்ற உள்ளார்.

 இந்த தேசிய அளவிலான வாராந்திர விழா உரையாடல் சார்ந்த நிகழ்ச்சியாக நடைபெறவுள்ளது. பஞ்சாயத் ராஜ்,  அமைச்சக மற்றும் துறை மாநில மற்றும் யூனியன் பிரதேச, குடிமைப்பணி, இந்திய தொழில்நுட்ப கழகம், இந்திய மேலாண்மை கழகம், அரசு சாரா தொண்டு நிறுவனங்கள், சர்வதேச முகமை பிரதிநிதிகள் உள்ளிட்டோர் இந்த வாராந்திர விழாவில் பங்கேற்க உள்ளனர். பல்வேறுத் துறை பிரதிநிதிகளின் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டு எதிர்கால நடவடிக்கைக்கு தேவையான  கொள்கைகளை வகுப்பது ஆகியவை இவ்விழாவில் மேற்கொள்ளப்படவுள்ளது.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1815159

***********(Release ID: 1815174) Visitor Counter : 239