பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு
azadi ka amrit mahotsav

செயல்படாத நிலக்கரி சுரங்கங்களை அபராதம் இன்றி ஒப்படைக்க அரசு நிறுவனங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்க அமைச்சரவை ஒப்புதல்

Posted On: 08 APR 2022 4:01PM by PIB Chennai

செயல்படாத சுரங்கங்களை அபராதமின்றி மற்றும் எந்த காரணத்தையும் குறிப்பிடாமல் ஒப்படைக்க மத்திய மற்றும் மாநில பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஒரு முறை வாய்ப்பு வழங்குவதற்கான நிலக்கரி அமைச்சகத்தின் முன்மொழிவுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழு  இன்று ஒப்புதல் அளித்துள்ளது.

நிலக்கரி சுரங்கங்களை ஒப்படைக்க கொள்கை வெளியிடப்பட்ட நாளிலிருந்து மூன்று மாத கால அவகாசம் அரசு நிறுவனங்களுக்கு வழங்கப்படும்.

2021 டிசம்பர் வரை அரசு நிறுவனங்களுக்கு ஒதுக்கப்பட்ட 73 நிலக்கரி சுரங்கங்களில் 45 சுரங்கங்கள் செயல்படாமல் இருந்தன, மேலும் 19 நிலக்கரி சுரங்கங்களில் சுரங்கச் செயல்பாடுகள் தொடங்குவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது. ஒதுக்கீட்டாளர்களின் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்ட காரணங்களால் தாமதம் ஏற்பட்டது.

நாட்டின் எரிசக்தி பாதுகாப்பில் நிலக்கரி துறை முக்கிய பங்கு வகிக்கிறது. தரமான நிலக்கரிச் சுரங்கங்கள், தொழில்நுட்பச் சிக்கல்களை நீக்கி, எல்லைகளை சரிசெய்த பிறகு விரைவாக மறுசுழற்சி செய்து, ஆர்வமுள்ள தரப்பினருக்கு வழங்கப்படலாம்.

இந்த நடவடிக்கை மூலம் வேலைவாய்ப்பு அதிகரிக்கும், முதலீடு அதிகரிக்கும். நாட்டின் பின்தங்கிய பகுதிகளின் பொருளாதார வளர்ச்சிக்கு இது பங்களிக்கும். நாட்டில் நிலக்கரி இறக்குமதியை இது குறைக்கும்.

மேலும் விவரங்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1814829

*************** 


(Release ID: 1814961) Visitor Counter : 194