சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
தானியங்கி பரிசோதனை நிலையங்கள் மூலம் மோட்டார் வாகனங்களின் கட்டாய தகுதி சரிபார்ப்பு தொடர்பான அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது
Posted On:
07 APR 2022 11:21AM by PIB Chennai
தானியங்கி பரிசோதனை நிலையங்கள் மூலமாக மட்டுமே மோட்டார் வாகனங்களின் கட்டாய தகுதி சரிபார்ப்பு செய்வதற்கான அறிவிக்கையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் 2022 ஏப்ரல் 5 அன்று வெளியிடப்பட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன சட்டங்கள் 1989-ன் 175 ஆவது விதியின் படி இந்த பரிசோதனை மையங்கள் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும்.
கனரக சரக்கு வாகனங்கள் / கனரக பயணிகள் மோட்டார் வாகனங்கள் 2023 ஏப்ரல் 1 முதலும்
நடுத்தர சரக்கு வாகனங்கள் / நடுத்தர பயணிகள் மோட்டார் வாகனங்கள் மற்றும் இலகு ரக மோட்டார் வாகனங்கள் (போக்குவரத்து) 2024 ஜூன் 1 முதலும் கட்டாயம் தானியங்கி பரிசோதனை நிலையங்கள் மூலம் தகுதி சரிபார்ப்பு செய்யப்பட வேண்டும்.
**************
(Release ID: 1814453)
Visitor Counter : 200