பிரதமர் அலுவலகம்

பிரதமர் திரு நரேந்திர மோடி, நேபாள பிரதமருடன் கூட்டாக அளித்த பேட்டி

Posted On: 02 APR 2022 1:34PM by PIB Chennai

மாண்புமிகு

பிரதமர் ஷெர் பகதூர் தாபா அவர்களே,

மரியாதைக்குரிய விருந்தினர்களே,

ஊடக நண்பர்களே,

நமஸ்காரம்!

பிரதமர் தாபா அவர்களை இந்தியாவிற்கு வரவேற்பது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. இந்திய புத்தாண்டு மற்றும் நவராத்திரி நன்னாளான இன்று, தாபா அவர்கள் வந்திருக்கிறார். அவருக்கும் இந்தியா மற்றும் நேபாள மக்கள் அனைவருக்கும் நவராத்திரி நல்வாழ்த்துகள்.

தாபா அவர்கள், இந்தியாவின் நீண்ட நாளைய நண்பர், இந்தியா – நேபாள நட்புறவை மேம்படுத்துவதில் தாபா முக்கிய பங்கு வகித்துள்ளார்.

நண்பர்களே,  

இந்தியா – நேபாளம் இடையிலான நட்புறவு, நமது மக்களிடையேயான உறவுகளை உலகில் வேறு எங்கும் காணமுடியாது. நமது நாகரீகம், நமது கலாச்சாரம், நமது  பரிமாற்றங்களின் திரட்டாக திகழ்கின்றன. நமது மக்களிடையேயான பரஸ்பர நட்புறவு மற்றும் அவர்களிடையேயான பரிமாற்றங்கள் நமது ஒத்துழைப்புகளுக்கு அடிப்படையாக திகழ்கின்றன. அவை நமது உறவுகளுக்கு சக்தியை அளித்து பராமரித்து வருகிறது.

நேபாளத்தை பொறுத்தவரை இந்தியாவின் கொள்கைகள் மற்றும் அதன் முயற்சிகள், இந்த உணர்வால்தான் உந்தப்படுகின்றன. நேபாளத்தின் அமைதி, வளர்ச்சி மற்றும் முன்னேற்ற பயணத்தில் இந்தியா உறுதியான பங்குதாரராக உள்ளது. இது வருங்காலத்திலும் தொடரும். 

சர்வதேச சூரியசக்தி கூட்டணியில், நேபாளம் உறுப்பினராக இணைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. இது நமது பிராந்தியத்தில் நீடித்த சுமார் குறைந்த செலவிலான தூய்மையான எரிசக்தி கிடைப்பதை உறுதி செய்யும்.

இருநாடுகளிடையே வர்த்தகம் மற்றும் போக்குவரத்து இணைப்புத் திட்டங்களுக்கு முன்னுரிமை அளிக்க நானும் பிரதமர் தாபாவும் ஒப்புக் கொண்டுள்ளோம்.  அந்த வகையில்தான்  ஜெயநகர் – குர்தா  ரயில் வழித்தடம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இது போன்ற திட்டங்கள், இருநாடுகளிடையே சுமூகமான முறையில், தடையற்ற பரிமாற்றங்களை மக்கள் மேற்கொள்ள உதவிகரமாக இருக்கும். நேபாளத்தில் ரூபே அட்டை அறிமுகம், நமது நிதி தொடர்பில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும். ராமாயண சுற்றுப்பாதை, நேபாள் கஞ்சில் ஒருங்கிணைந்த சோதனைச் சாவடி, நேபாள போலீஸ் அகாடமி போன்றவை இருநாடுகளிடையே மேலும் நெருக்கத்தை ஏற்படுத்தும்.

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1812875

----



(Release ID: 1813562) Visitor Counter : 123