சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
கடந்த 24 மணி நேரத்தில் 913 பேருக்கு புதிதாக தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது; 715 நாட்களுக்குப் பிறகு 1,000- க்கும் குறைவாக தொற்று காணப்படுகிறது
Posted On:
04 APR 2022 11:47AM by PIB Chennai
இந்தியாவில் தற்போது சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 12,597 ஆக குறைந்துள்ளது. 714 நாட்களுக்குப் பின் 13,000-க்கும் குறைவாக இது உள்ளது. நாட்டின் மொத்த நோய் தொற்று உள்ளவர்கள் தற்போது 0.03% ஆக உள்ளனர். 2020 ஏப்ரல் 18 அன்று சிகிச்சை பெற்றோரின் எண்ணிக்கை 12,974 ஆக இருந்தது.
தினசரி புதிய தொற்றுக்களின் எண்ணிக்கை 715 நாட்களுக்குப் பின் 1000-க்கும் கீழே இன்று 913 ஆக பதிவாகி உள்ளது. 2020 ஏப்ரல் 18 அன்று தினசரி புதிய கொவிட் நோயாளிகள் எண்ணிக்கை 991 ஆக இருந்தது.
இதை தொடர்ந்து இந்தியாவில் குணமடைந்தோர் விகிதம் 98.76 சதவீதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,316. பெருந்தொற்றின் தொடக்கத்திலிருந்து இதுவரை குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4,24,95,089.
கடந்த 24 மணி நேரத்தில் 3,14,823 கொவிட் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதுவரை மேற்கொள்ளப்பட்ட மொத்த பரிசோதனைகளின் எண்ணிக்கை 79.10 கோடி (79,10,79,706). வாராந்திரத் தொற்று 0.22 சதவீதமாக உள்ளது. தினசரித் தொற்று விகிதம் 0.29 சதவீதமாக பதிவாகியுள்ளது.
இந்தியாவில் கொவிட்-19 தடுப்பூசி செலுத்தப்பட்டோர் எண்ணிக்கை இன்று காலை 7 மணி நிலவரப்படி 184.70 கோடிக்கும் அதிகமான (1,84,70,83,279) டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. 2,21,87,532அமர்வுகள் மூலம் இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 தடுப்பூசி 12-14 வயதிற்குட்பட்டோருக்கான 16 மார்ச் 2022 அன்று தொடங்கப்பட்டது. இதுவரை, ஏறத்தாழ 1.81 கோடிக்கும் அதிகமான (1,86,39,260) இளம் பருவத்தினருக்கு கொவிட்-19 தடுப்பூசியின் முதல் டோஸ் செலுத்தப்பட்டுள்ளது.
மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1813072
***************
(Release ID: 1813117)
Visitor Counter : 190