பிரதமர் அலுவலகம்
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ் , பிரதமர் திரு நரேந்திர மோடியுடன் சந்திப்பு
प्रविष्टि तिथि:
01 APR 2022 7:01PM by PIB Chennai
ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் திரு செர்ஜி லாவ்ரோவ், பிரதமர் திரு நரேந்திர மோடியை இன்று (01.04.2022) சந்தித்து பேசினார்.
இந்த சந்திப்பின்போது, தற்போது நடைபெற்று வரும் அமைதிப் பேச்சுவார்த்தைகள் உட்பட, உக்ரைன் நிலவரம் குறித்து ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் லாவ்ரோவ், பிரதமரிடம் எடுத்துரைத்தார். மோதலை விரைவில் முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்ற தமது நிலைபாட்டை மீண்டும் வலியுறுத்திய பிரதமர், அமைதி முயற்சிகளுக்கு எந்த வகையிலும் பங்களிக்க இந்தியா தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
டிசம்பர் 21-ம் தேதி நடைபெற்ற இந்தியா – ரஷ்யா இருதரப்பு உச்சிமாநாட்டின் போது எடுக்கப்பட்ட முடிவுகளின் முன்னேற்றம் குறித்த நிலவரத்தையும் ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் பிரதமரிடம் எடுத்துரைத்தார்.
***************
(रिलीज़ आईडी: 1812541)
आगंतुक पटल : 214
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें:
English
,
Urdu
,
Marathi
,
हिन्दी
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam