பிரதமர் அலுவலகம்

ஆயுஷ் அமைச்சகம் உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ள நிலையில், பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார மையம் அமைக்கப்படுவதற்கு பிரதமர் வரவேற்பு

Posted On: 26 MAR 2022 9:14AM by PIB Chennai

பாரம்பரிய மருத்துவத்திற்கான உலக சுகாதார அமைப்பின் சர்வதேச மையத்தின் தாயகமாக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை முன்னிட்டு பிரதமர் திரு நரேந்திர மோடி, இந்தியாவின் மகிழ்ச்சியைத் தெரிவித்துள்ளார்.   இந்த மையம் இந்த கிரகத்தை (பூமியை) ஆரோக்கியமானதாக மாற்றுவதில் பெரும் பங்களிப்பை வழங்குவதோடு நமது செழுமை மிகுந்த பாரம்பரிய நடைமுறைகள் சர்வதேச நலனுக்கு பயன் அளிக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இந்த மையம் அமைக்கப்படும் நாடு என்ற முறையில், மத்திய ஆயுஷ் அமைச்சகம், உலக சுகாதார அமைப்புடன் ஒப்பந்தம் செய்துள்ளது.  

ஆயுஷ் அமைச்சகம் மற்றும் உலக சுகாதார அமைப்பு வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுகளுக்கு பதில் அளித்துள்ள பிரதமர்,

“பாரம்பரிய மருத்துவத்திற்கான அதிநவீன @WHO Global Centre-ன் தாயகமாவதில் இந்தியா பெருமிதம் அடைகிறது. ஆரோக்கியமான கிரகத்தை உருவாக்குவதிலும், நமது செழுமை மிகுந்த பாரம்பரிய நடைமுறைகளை உலகின் நன்மைக்காக பயன்படுத்துவதிலும் இந்த மையம் முக்கிய பங்களிப்பை வழங்கும்” என்று தெரிவித்துள்ளார்.

“இந்தியாவின் பாரம்பரிய மருந்துகள் மற்றும் நல்வாழ்வு நடைமுறைகள் உலகம் முழுவதும் மிகவும் பிரசித்திபெற்றது. நமது சமுதாயத்தில் ஆரோக்கியத்தை மேம்படுத்த இந்த @WHO  Centre பெரும் பங்கு வகிக்கும்.

----



(Release ID: 1809962) Visitor Counter : 188