பிரதமர் அலுவலகம்
azadi ka amrit mahotsav

பிரதமர் நரேந்திர மோடிக்கும், பிரிட்டன் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு போரிஸ் ஜான்சனுக்கும் இடையே தொலைபேசி உரையாடல்

प्रविष्टि तिथि: 22 MAR 2022 9:56PM by PIB Chennai

பிரிட்டன் பிரதமரும், நாடாளுமன்ற உறுப்பினருமான மாண்புமிகு போரிஸ் ஜான்சனுடன், பிரதமர் நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

உக்ரைன் நிலைமை குறித்து இரு தலைவர்களும் விரிவாக விவாதித்தனர். மோதல்களை நிறுத்தி பேச்சுவார்த்தை மற்றும் தூதரக உறவுப் பாதைக்கு திரும்ப வேண்டுமென்ற இந்தியாவின் தொடர்ச்சியான வேண்டுகோளைப் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.

வர்த்தகம், தொழில்நுட்பம், முதலீடுகள், பாதுகாப்பு மற்றும் பந்தோபஸ்து, மக்களிடையேயான உறவுகள் உட்பட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேலும் ஆழப்படுத்த இரு தலைவர்களும் ஒப்புக் கொண்டனர்.

பரஸ்பர வசதிக்கு ஏற்ப விரைவில் பிரதமர் ஜான்சனை இந்தியாவில் வரவேற்கும் தமது விருப்பத்தைப் பிரதமர் வெளிப்படுத்தினார்.

 

***


(रिलीज़ आईडी: 1808629) आगंतुक पटल : 217
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Malayalam , English , Urdu , Marathi , हिन्दी , Manipuri , Bengali , Assamese , Punjabi , Gujarati , Odia , Telugu , Kannada