பிரதமர் அலுவலகம்

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள எஸ்ஜிவிபி குருகுலத்தில் நடைபெற்ற பாவ் வந்தனா நிகழ்ச்சியில் பிரதமர் மோடியின் உரை

Posted On: 20 MAR 2022 10:51PM by PIB Chennai

குஜராத் மாநிலம் அகமதாபாதில் உள்ள எஸ்ஜிவிபி குருகுலத்தில் நடைபெற்ற பாவ் வந்தனா நிகழ்ச்சியில் பிரதமர் திரு நரேந்திர மோடி பேசினார்.  பூஜ்ய சாஸ்திரிஜி மகராஜின் வாழ்க்கை வரலாறு வெளியீட்டையொட்டி இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 

அப்போது பேசிய பிரதமர், சிறந்த ஆளுமைகளின் வரலாறுகளும், கதைகளும், எழுத்தால் பதிவு செய்யப்படுவதைவிட, வாய்வழியாக கேட்பது என்றும் நினைவில் நிற்கும் என்று தெரிவித்தார்.  பூஜ்ய சாஸ்திரி மகராஜின் வாழ்க்கை வரலாறு சமூகத்தில் சேவைக்காக அர்ப்பணிப்பு செய்யப்பட்ட ஆளுமையின் சுயநலமற்ற வாழ்க்கை முறையை தெரிவிப்பதாக உள்ளது என்று கூறினார்.

குருகுல பாரம்பரியம், கலாச்சாரம், சமூகம்  ஆகியவை நாட்டின் சாதாரண மக்களுக்கு உத்வேகம் அளிப்பதாக தெரிவித்தார்.  சாஸ்திரிஜி தமது குருகுலம் வாயிலாக உலகம் முழுவதும் பலதரப்பட்ட நபர்களின் வாழ்க்கை முறையை பண்படுத்தியுள்ளதாக கூறினார்.  அவருடைய வாழ்க்கை முறை கற்பித்தல் மற்றும் உத்தரவிடுவதாகவும் மட்டுமல்லாமல் கடமையை செய்வதற்கான வழிவகைகள் குறித்து உபதேசித்தார் என்றும் பிரதமர் குறிப்பிட்டார். 

***************



(Release ID: 1807579) Visitor Counter : 153