தொலைதொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்
தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் இந்தியாவின் வெற்றியை எடுத்துரைக்கும் நிகழ்வுக்கு இந்திய தொலைத்தொடர்புதுறையும், காமன்வெல்த் தொலைத் தொடர்பு அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது
Posted On:
18 MAR 2022 9:40AM by PIB Chennai
டிஜிட்டல் தீர்வுகளுடன் மாற்றத்தை ஏற்பதற்கு காமன்வெல்த் தொலைத் தொடர்பு அமைப்பின் உறுப்பு நாடுகளை ஊக்கப்படுத்துவதற்காக, தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பங்களை செயல்படுத்துவதில் இந்தியாவின் வெற்றியை எடுத்துரைக்கும் நிகழ்வுக்கு இந்திய தொலைத் தொடர்புத்துறையும், காமன்வெல்த் தொலைத் தொடர்பு அமைப்பும் ஏற்பாடு செய்திருந்தது. ‘டிஜிட்டல் முறையிலான பரிமாற்றத்தின் மையம்- இந்தியா’ என்ற பொருளில் இணையவழியாக இந்த நிகழ்வு நடைபெற்றது. 33 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட காமன்வெல்த் தொலைத் தொடர்பு அமைப்பில் (சிடிஓ) இந்தியா ஓர் உறுப்பு நாடாக உள்ளது.
டிஜிட்டல் இந்தியா திட்டத்தில் குறிப்பிடத்தக்க அம்சங்களாக உள்ள ஆதார், யூபிஐ நடைமுறைகளின் வெற்றிக்கதைகள் இந்த நிகழ்வில் சிடிஓ உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளுடன் பகிரப்பட்டன. 1.26 பில்லியன் ஆதார் அட்டைகள், 68+ பில்லியன் அங்கீகாரங்கள், ஆதாருடன் இணைக்கப்பட்ட நேரடிப் பயன்பரிமாற்றம் மற்றும் அதன் இதர பயன்பாடுகள் போன்ற ஆதாரின் சிறப்பு அம்சங்கள் இந்த நிகழ்வில் எடுத்துரைக்கப்பட்டன. இந்த வெற்றிக்கதைகளை தங்களுடன் பகிர்ந்து கொண்ட இந்தியாவை சிடிஓ மற்றும் அதன் உறுப்பு நாடுகள் பாராட்டின.
***************
(Release ID: 1807160)
Visitor Counter : 222