நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகம்
azadi ka amrit mahotsav

சரக்கு மற்றும் சேவைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக மாற, அதிக தரமான பொருட்களை நுகர்வோர்கள் கேட்க வேண்டும்: மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் வலியுறுத்தல்

Posted On: 15 MAR 2022 6:33PM by PIB Chennai

நுகர்வோர் நலன்களை பாதுகாக்க சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துவது அவசியம் என்றும், அதே நேரத்தில் சிறு வணிகர்களை தொந்தரவு செய்ய சட்ட விதிமுறைகளை பயன்படுத்தக் கூடாது என்றும் மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறியுள்ளார். 


உலக நுகர்வோர் உரிமைகள் தினத்தை முன்னிட்டு, ‘‘ நியயமான டிஜிட்டல் நிதி’’ குறித்த நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு. பியூஷ் கோயல், சட்டத்தின் பெயரால், சிறு வணிகர்களை தொந்தரவு செய்வதை நிறுத்த வேண்டியது அவசியம் என கூறினார். 


எளிதாக தொழில் செய்வதை கருத்தில் கொண்டு, எடையளவு சட்டத்தின் சில விதிமுறைகளையும்,  குற்றமற்றதாக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் கூறினார். 


எடையளவு சட்ட பிரிவுகளின் கீழ் 90,000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும்,  இதில்  90 சதவீத வழக்குகள் சரிபார்க்கப்படாத எடையளவை பயன்படுத்தியது, தரமற்ற பொருட்களை விற்றது, தரமற்ற எடைகள் மற்றும் அளவுகளை பயன்படுத்தியது போன்றவற்றுடன் தொடர்புடையது என திரு. பியூஷ் கோயல் கூறினார். 

 

நுகர்வோரின் நலன்கள் மற்றும் உரிமைகளை பாதுகாக்க பலதுறை அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை அவர் பாராட்டினார். 


சரக்கு மற்றும் சேவைகளில் இந்தியா உலகின் முன்னணி நாடாக மாற, அதிக தரமான பொருட்களை நுகர்வோர்கள் கேட்க வேண்டும் என்றும் மத்திய அமைச்சர் திரு பியூஷ் கோயல் கூறினார். 


நுகர்வோர் விவகாரத்துறை இணையமைச்சர்கள் திரு அஸ்வினி குமார் சவுபே, திருமிகு சாத்வி நிரஞ்ஜன் ஜோதி உட்பட பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். 

 மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்தி குறிப்பை காணவும்:  https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1806283


(Release ID: 1806558) Visitor Counter : 181