சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

கொவிட் -19 தடுப்பூசி - அண்மைத் தகவல்

Posted On: 14 MAR 2022 1:55PM by PIB Chennai

அறிவியல் அமைப்புகளுடனான விரிவான கலந்தாலோசனைக்கு பிறகு கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதை 12-13 மற்றும் 13-14 வயதுடையவர்களுக்கும் (2008, 2009 மற்றும் 2010-ஆம் ஆண்களில் பிறந்தவர்களுக்கு, அதாவது ஏற்கனவே 12 வயதை கடந்தவர்களுக்கு) 16 மார்ச் 2022 முதல் தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.  இந்த வயது பிரிவினருக்கு ஐதராபாதில் உள்ள பயாலஜிக்கல்-இ நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கோர்பிவேக்ஸ், தடுப்பூசி செலுத்தப்படும்.

கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தின் கீழ், 14 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு ஏற்கனவே தடுப்பூசி செலுத்தப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

60 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை செலுத்துவதில் உள்ள இணை நோய் பாதிப்பு என்ற நிபந்தனையை உடனடியாக நீக்கவும் அரசு முடிவு செய்துள்ளது. எனவே, 16 மார்ச் 2022 முதல், 60 வயதுக்கும் மேற்பட்ட அனைவரும் கொவிட்-19 முன்னெச்சரிக்கை தவணை தடுப்பூசியை செலுத்திக் கொள்ள தகுதி உடையவர்கள் ஆவார்கள்.

-----


(Release ID: 1805858) Visitor Counter : 276