ஆயுஷ்
யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் உலகத்தலைமை ஏற்கும் உயரிய நிலையில் இந்தியா உள்ளது-திரு சர்பானந்த சோனோவால்
Posted On:
13 MAR 2022 4:34PM by PIB Chennai
எட்டாவது சர்வதேச யோகா தினத்திற்கு நூறு நாட்கள் இருக்கும் நிலையில், யோகா மகோத்சவம் என்னும் 100 நாள் கீழ் நோக்கி என்னும் நிகழ்ச்சியை மத்திய ஆயுஷ், துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால் இன்று தொடங்கிவைத்தார். ஹரியானா முதலமைச்சர் திரு மனோகர் லால் கட்டார், சிக்கிம் முதலமைச்சர் திரு பிரேம் சிங் தமாங், மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் திரு பூபேந்திர யாதவ், ஆயுஷ் இணையமைச்சர் டாக்டர் முன்ஜ்பாரா மகேந்திரபாய், வெளியுறவு மற்றும் கலாச்சாரத்துறை இணையமைச்சர் திருமதி மீனாட்சி லேகி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
இந்த ஆண்டு சர்வதேச யோகா தின இயக்கம், உலகம் முழுவதும், 100 நாள் மையப்பொருள், 100 நகரங்கள், 100 அமைப்புகள் என வரும் ஜூன் 21 வரை நடைபெறும். 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் விடுதலையின் அமிர்தப்பெருவிழாவைக்குறிக்கும் வகையில், இந்த ஆண்டு 75 பாரம்பரிய, கலாச்சாரப் பெருமை கொண்ட 75 நகரங்களில் ஜூன் 21-ம்தேதி யோகா நிகழ்ச்சிகள் நடைபெறும்.
நிகழ்ச்சியில் பேசிய மத்திய அமைச்சர் திரு சர்பானந்த சோனோவால், யோகா மற்றும் பாரம்பரிய மருத்துவத்தில் உலகத்தலைமை ஏற்கும் உயரிய நிலையில் இந்தியா உள்ளது என்றார். உலக சுகாதார அமைப்பின் பாரம்பரிய மருத்துவத்துக்கான உலக மையம் இந்தியாவில் அமைக்கப்படவுள்ளது என்று அவர் தெரிவித்தார்.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு ஆங்கிலச் செய்திக்குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1805537
**********
(Release ID: 1805554)
Visitor Counter : 236