பிரதமர் அலுவலகம்
உக்ரைனில் போர் காரணமாக உலகில் ஏற்பட்டுள்ள சூழல், இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை பற்றி ஆய்வு செய்யும் சிசிஎஸ் கூட்டத்திற்கு பிரதமர் தலைமை தாங்கினார்
Posted On:
13 MAR 2022 2:29PM by PIB Chennai
உக்ரைனில் போர் காரணமாக உலகில் ஏற்பட்டுள்ள சூழல், இந்தியாவின் பாதுகாப்பு தயார்நிலை பற்றி ஆய்வு செய்வதற்கான பாதுகாப்பு குறித்த அமைச்சரவைக் குழு கூட்டத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமை தாங்கினார்.
தற்போதைய நிலவரம், இந்தியாவின் எல்லைப் பகுதிகள், கடல் மற்றும் வான் வழிகளில் பாதுகாப்பு தயார்நிலையின் அம்சங்கள் பற்றி பிரதமருக்கு விளக்கப்பட்டது.
உக்ரைனில் இருந்து இந்தியர்களை மட்டுமல்லாமல் அண்டை நாடுகளைச் சேர்ந்தவர்களையும் மீட்கும் ஆபரேசன் கங்கா உள்பட அண்மை நிகழ்வுகள் பற்றியும் கூட்டத்தில் பிரதமருக்கு விளக்கப்பட்டது.
கார்கிவ்வில் உயிரிழந்த நவீன் சேகரப்பாவின் உடலைக் கொண்டு வர, இயன்ற அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளுமாறு பிரதமர் அறிவுறுத்தினார்.
***************
(Release ID: 1805528)
Read this release in:
English
,
Urdu
,
Hindi
,
Marathi
,
Assamese
,
Manipuri
,
Bengali
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam