தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்
சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலை ஒலிபரப்பு
Posted On:
09 MAR 2022 12:21PM by PIB Chennai
ஐந்து மாநிலங்களில் அண்மையில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை அறிந்து கொள்ள மக்கள் ஆர்வத்துடன் உள்ள வேளையில், பொதுத்துறை ஒலிபரப்பு நிறுவனமான பிரசார் பாரதியின் செய்திப் பிரிவுகளான டிடி நியூஸ் மற்றும் அகில இந்திய வானொலி செய்தியில் வாக்கு எண்ணிக்கை தினமான மார்ச் 10 2022 அன்று தேர்தல் முடிவுகளை வினாடிக்கு வினாடி புதிதாக கிடைக்கும் முடிவுகளை ஒலிபரப்ப ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
செய்தியாளர்கள், பகுதி நேர செய்தியாளர்கள் உள்ளிட்ட விரிவான கள ஏற்பாடுகளுடன், வாக்கு எண்ணிக்கை நிலவரம் சரியான செய்தியை உடனுக்குடன் தெரிவிப்பதுடன் அரசியல் நிபுணர்கள் பங்கேற்கும் விவாத நிகழ்ச்சிகளும், நாளை காலை 7 மணி முதல் ‘ஜனதேஷ்’ என்ற பெயரில் டிடி நியூஸ் தொலைக்காட்சியில் நேரலையாக ஒலிபரப்பப்பட உள்ளது.
தேர்தல் நடைபெற்ற மாநிலங்களின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் உள்ள எமது குழுவினர் வினாடிக்கு வினாடி அனுப்பும் அண்மைத் தகவல்களைத் தொகுத்து, 3டி வரைகலை விளக்கங்களுடன் நேயர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
இது தவிர, உத்தரப்பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், மணிப்பூர் மற்றும் கோவா மாநிலங்களில் உள்ள தூர்தர்ஷன் மண்டல செய்திப் பிரிவுகளும் நாளை காலை 7 மணி முதல் தனியாக சிறப்பு செய்தி அறிக்கைகள் மற்றும் தேர்தல் முடிவுகளை ஒலிபரப்ப ஏற்பாடு செய்துள்ளன.
அகில இந்திய வானொலியின் செய்திப் பிரிவும், நாளை காலை 7 மணி முதல் தேர்தல் முடிவுகளை உடனுக்குடன் வெளியிட ஏற்பாடு செய்துள்ளன. அகில இந்திய வானொலியின் எஃப்எம் கோல்டு, (100.1 MHz), எஃப்எம் ரெயின்போ, விவித் பாரதி மற்றும் அகில இந்திய வானொலியின் பிற உள்ளூர் அலைவரிசைகளிலும் தேர்தல் முடிவுகள் ஒலிபரப்பப்பட உள்ளது. இந்த செய்தி அறிக்கைகளை அகில இந்திய வானொலியின் யூட்யூப் அலைவரிசையிலும் அறிந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804267
-----
(Release ID: 1804356)
Visitor Counter : 263