சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம்

கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதில் சிறந்து விளங்கிய பெண்களை சர்வதேச மகளிர் தினத்தையொட்டி மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா கௌரவித்தார்

Posted On: 08 MAR 2022 5:25PM by PIB Chennai

நாடு முழுவதும் கொவிட்-19 தடுப்பூசி செலுத்துவதில் சிறந்து விளங்கிய மகளிருக்கு சர்வதேச மகளிர் தினத்தையொட்டி கௌரவம் அளிக்கப்பட்டது.  புதுதில்லி தேசிய சுகாதாரம் மற்றும் குழந்தைகள் நல நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் டாக்டர் மன்சுக் மாண்டவியா இந்தியாவின் மிகப்பெரிய கொவிட்-19 தடுப்பூசி திட்டத்தை வெற்றிகரமாக செயல்படுத்த இடையறாது பணியாற்றிய அவர்களை அங்கீகரிக்கும் வகையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. தடுப்பூசி பயணத்தில் பெண் செவிலியர்கள் மிக முக்கிய பங்காற்றினார்கள். இந்த ஆண்டு சர்வதேச மகளிர் தினத்தின் கருப்பொருள் “நாளைய நிலைத்தன்மைக்கு இன்றைய பாலின சமத்துவம்” என்பதாகும்

 சுகாதாரத்துறையின் முழுமையான வளர்ச்சிக்கு பெண் வீரர்களின் முயற்சியே காரணம் என மத்திய அமைச்சர் பாராட்டினார். பெண்களின் பங்களிப்பு இல்லாமல் சுகாதாரத்துறை வளர்ச்சி முழுமையடையாது என்று கூறிய அவர், ஆஷா, ஏஎன்எம் தொழிலாளர்கள் சுகாதாரத்துறை மேம்பாட்டுக்கு முக்கியத் தூண்கள் என்று தெரிவித்தார்.  நமது ஆஷா தொழிலாளர்கள் நாட்டுக்கு  இடையறாமல் பணியாற்றி வருகின்றனர். கடினமான சூழல் மற்றும் மலைப்பகுதிகளிலும் ஒவ்வொரு வீட்டையும் அணுகி, ஒவ்வொருவரும்  தடுப்பூசி செலுத்திக் கொள்வதை அவர்கள் உறுதிப்படுத்தியுள்ளதாக அமைச்சர் பாராட்டினார்.

நாடு முழுவதையும் சேர்ந்த பெண் தடுப்பூசி செலுத்துபவர்களின் அர்ப்பணிப்பை புகழ்ந்துரைத்த டாக்டர் மன்சுக் மாண்டவியா, 2021-ம் ஆண்டு ஜனவரி 16-ம் தேதி பிரதமர் உலகின் மிகப்பெரிய தடுப்பூசி திட்டத்தை தொடங்கி வைத்ததில் இருந்து, அது வேகம் பெற்று கொவிட் பெருந்தொற்றை வெற்றிகரமாக சமாளிக்க உதவியிருப்பதாக தெரிவித்தார்.

 மத்திய சுகாதாரத்துறை இணையமைச்சர் டாக்டர் பாரதி பிரவீண் பவாரும், பெண் தடுப்பூசி செலுத்துபவர்களுக்கு பாராட்டு தெரிவித்தார்.

இன்றைய விருது வழங்கும் நிகழ்ச்சியில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த 72 பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

மேலும் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1804013

***************



(Release ID: 1804032) Visitor Counter : 148