உள்நாட்டு விமானப் போக்குவரத்து அமைச்சகம்

உக்ரைனின் அண்டை நாடுகளில் இருந்து சிறப்பு விமானங்கள் மூலம் சுமார் 10,800 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர்

Posted On: 04 MAR 2022 5:37PM by PIB Chennai

ஆபரேஷன் கங்கா திட்டத்தின்கீழ் இன்று 17 சிறப்பு விமானங்கள் உக்ரைனுக்கு அண்டை நாட்டுக்குத் திரும்பியுள்ளன. இவற்றில் 14 சிவில் விமானங்கள், 3 சி-17 இந்திய விமானப்படை விமானங்களாகும்.  மேலும் ஒரு சிவில் விமானம் இன்று வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சிவில் விமானங்கள் 3,142 பேரையும், விமானப்படை விமானங்கள் 630 பயணிகளையும் ஏற்றி வந்துள்ளன.  இதுவரை 9,364 இந்தியர்கள், 43 சிறப்பு சிவில் விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டுள்ளனர்.  விமானப்படையைச் சேர்ந்த 7 விமானங்களில் இதுவரை 1,428  பயணிகளை அழைத்து வந்துள்ளன.  மேலும், 9.7 டன் நிவாரணப் பொருட்களையும் அவை ஏற்றி வந்துள்ளன.

புகாரெஸ்டிலிருந்து 4 விமானங்களும், கோசிஸிலிருந்து 2 விமானங்களும், புடாபெஸ்டிலிருந்து 4 விமானங்களும், செஸோவிலிருந்து 3 விமானங்களும், சுசிவாவில் இருந்து 2 விமானங்களும் இன்று வந்துள்ளன.  இவை அனைத்தும் சிவில் விமானங்களாகும்.  விமானப்படை விமானங்களை பொறுத்தவரை புகாரெஸ்டிலிருந்து 2 விமானங்களும், புடாபெஸ்டிலிருந்து ஒரு விமானமும் இன்று வந்தன.

நாளை 11 சிறப்பு சிவில் விமானங்கள், 2,200-க்கு மேற்பட்ட இந்தியர்களை திரும்ப அழைத்துவரும் என்றும், இதில் 10 புதுதில்லிக்கும், 1 மும்பைக்கும் செல்லும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.  புடாபெஸ்டிலிருந்து 5 விமானங்கள், செஸோவிலிருந்து 2 விமானங்கள், சுசிவாவிலிருந்து 4 விமானங்கள் புறப்படும்.  இந்திய விமானப்படையைச் சேர்ந்த 4 விமானங்கள், ருமேனியா, போலந்து, ஸ்லோவேக்கியா ஆகியவற்றிலிருந்து புறப்பட்டு நாளை அதிகாலையில் வந்தடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

***************



(Release ID: 1803008) Visitor Counter : 203