உள்துறை அமைச்சகம்
மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித் ஷா தலைமையிலான உயர்மட்டக் குழு, தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்திற்கு கூடுதல் மத்திய நிதி உதவியாக ரூ.1,682.11 கோடி வழங்க ஒப்புதல்
தமிழ்நாட்டிற்கு ரூ.352.85 கோடி ஒதுக்கீடு
புதுச்சேரிக்கு ரூ. 17.86 கோடி ஒதுக்கீடு
Posted On:
03 MAR 2022 10:43AM by PIB Chennai
2021-ம் ஆண்டில் வெள்ளப்பெருக்கு/நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்கள் மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு, தேசிய பேரிடர் நிவாரண நிதியத்தில் இருந்து கூடுதல் மத்திய நிதியுதவி வழங்க மத்திய உள்துறை அமைச்சர் திரு அமித்ஷா தலைமையிலான உயர்மட்டக்குழு ஒப்புதல் அளித்துள்ளது.
இயற்கை பேரிடர்களை எதிர்கொண்ட இந்த மாநிலங்களைச் சேர்ந்த மக்களுக்கு உதவுவது என்ற பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசின் உறுதிப்பாட்டை இது உறுதி செய்வதாக உள்ளது. இதன்படி தமிழ்நாட்டிற்கு ரூ.352 கோடியே 85 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி யூனியன் பிரதேசத்திற்கு ரூ. 17 கோடியே 86 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த கூடுதல் நிதியுதவி மத்திய அரசால் மாநிலங்களுக்கு, மாநில பேரிடர் நிவாரண நிதியத்திற்கு ஏற்கனவே வழங்கப்பட்ட நிதிக்கு அப்பாற்பட்டதாகும்.
மாநிலங்களிடமிருந்து நிதியுதவி கோரிக்கை மனுக்கள் வரும் வரை காத்திருக்காமல், பாதிப்பு ஏற்பட்டவுடன் மத்திய அரசே, இந்த மாநிலங்களுக்கு பல்துறை அதிகாரிகள் அடங்கிய குழுவை உடனடியாக அனுப்பி சேதவிவரங்களை மதிப்பீடு செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் கூடுதல் விவரங்களுக்கு இதன் ஆங்கில செய்திக் குறிப்பை காணலாம் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1802505
***************
(Release ID: 1802533)
Visitor Counter : 239