பிரதமர் அலுவலகம்
‘தொழில்நுட்பம் சார்ந்த வளர்ச்சி’ என்ற இணையவழி கருத்தரங்கில் பிரதமர் உரையாற்றினார்
“நாட்டு மக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பம் நமக்கு ஒரு வழியாக இருக்கிறது. நாட்டினை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இந்தக் கண்ணோட்டம் பிரதிபலிக்கிறது”
“வலுவான 5ஜி செயல்முறையுடன் தொடர்புடைய ஒருங்கிணைந்த உற்பத்திக்கான உத்தேசங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம், பிஎல்ஐ திட்டங்களுக்கு தெளிவான வரைபடத்தை பட்ஜெட் அளித்துள்ளது”
“வாழ்க்கையை எளிதாக்க தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்துவது எவ்வாறு என்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்”
“நமது தற்சார்பு நிலைத்தன்மையிலிருந்து கொவிட் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு வரை உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது. அனைத்துத் துறையிலும் இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டியுள்ளது”
Posted On:
02 MAR 2022 11:13AM by PIB Chennai
பட்ஜெட்டின் கோட்பாடுகளை ஒரு கால வரம்புக்குள் முழுமையாக அமலாக்க சம்பந்தப்பட்டவர்களை ஊக்கப்படுத்தவும், அவர்களுடன் கலந்தாலோசிக்கவும் பட்ஜெட்டுக்குப் பிந்தைய தொடர்ச்சியான இணையவழி கருத்தரங்குகளில் ஏழாவது கருத்தரங்கில் பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று உரையாற்றினார். இந்தக் கருத்தரங்குகளின் முக்கியத்துவத்தை விவரித்த அவர், “பட்ஜெட்டின் வெளிச்சத்தில் இதில் உள்ள அம்சங்களில் விரைவாகவும், தடையின்றியும், அதிகபட்ச பயனுடனும் நாம் எவ்வாறு அமலாக்க முடியும் என்பதை உறுதி செய்வதற்கான கூட்டு முயற்சியாகும் இது” என்றார்.
தமது அரசுக்கு அறிவியலும், தொழில்நுட்பமும் தனித்தனியான துறை அல்ல என்பதைப் பிரதமர் எடுத்துரைத்தார். பொருளாதாரத் துறையில் டிஜிட்டல் பொருளாதாரம், ஃபின்டெக் போன்றவை இணைக்கப்பட்டுள்ளன. அதே போல் அடிப்படைக் கட்டமைப்பு மற்றும் மக்களுக்கு சேவை செய்தல் தொடர்பான பார்வையில் நவீன தொழில்நுட்பம் மிகப் பெரும் பங்கினை வகிக்கிறது. “நாட்டு மக்களுக்கு அதிகாரமளிக்க தொழில்நுட்பம் நமக்கு ஒரு வழியாக இருக்கிறது. நாட்டினை தற்சார்புடையதாக மாற்றுவதற்கு தொழில்நுட்பம் நமக்கு முக்கியமானதாக இருக்கிறது. இந்த ஆண்டு பட்ஜெட்டிலும் இந்தக் கண்ணோட்டம் பிரதிபலிக்கிறது” என்று பிரதமர் கூறினார். அமெரிக்கா போன்ற வளர்ச்சியடைந்த நாடுகளும் தற்சார்பு இந்தியாவின் முக்கியத்துவம் பற்றி பேசுவதை அதிபர் பைடனின் அண்மைக்கால உரை கோடிட்டுக் காட்டுவது பற்றி பிரதமர் பேசினார். “புதிய உலக நடைமுறை வளர்ந்து வரும் நிலையில், தற்சார்பு இந்தியா மீதான கவனத்துடன் நாம் முன்னேறி வருவது குறிப்பிடத்தக்கது” என்று அவர் கூறினார்.
செயற்கை நுண்ணறிவு, புவிசார் தரவுகளுக்கான நடைமுறைகள், ட்ரோன்கள், செமி கடத்திகள், விண்வெளி தொழில்நுட்பம், மரபணு ஆய்வு, மருந்து தயாரிப்பு, 5ஜி வரையிலான தூய்மை தொழில்நுட்பங்கள் போன்ற பல்வேறு துறைகளில் பட்ஜெட் அளித்துள்ள முக்கியத்துவத்தை திரு.மோடி எடுத்துரைத்தார். வலுவான 5ஜி செயல்முறையுடன் தொடர்புடைய ஒருங்கிணைந்த உற்பத்திக்கான உத்தேசங்களுக்கு 5ஜி அலைக்கற்றை ஏலம், பிஎல்ஐ திட்டங்களுக்கு தெளிவான வரைபடத்தை பட்ஜெட் அளித்துள்ளது என்று அவர் கூறினார். இந்தத் துறையில் தனியார் துறையினர் தங்களின் முயற்சிகளை அதிகரிக்குமாறும் அவர் கேட்டுக் கொண்டார்.
‘அறிவியல் அனைவருக்குமானது, தொழில்நுட்பம் உள்நாட்டுக்கானது’ என்று கூறப்படுகிற கருத்தினை குறிப்பிட்டுப் பேசிய பிரதமர், “அறிவியலின் கோட்பாடுகளை நாம் அறிந்துள்ளோம். ஆனால் “வாழ்க்கையை எளிதாக்க தொழில்நுட்பத்தை அதிகபட்சம் பயன்படுத்துவது எவ்வாறு என்பதற்கு நாம் முக்கியத்துவம் அளிக்க வேண்டும்” என்றார். வீடு கட்டுமானம், ரயில்வே, விமான நிலையங்கள், நீர்வழிப்பாதைகள், கண்ணாடி இழை வடங்கள் ஆகியவற்றில் முதலீடு குறித்து அவர் பேசினார். இந்த முக்கியமான துறைகளில் தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கான ஆலோசனைகளுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
பொழுதுபோக்கு விளையாட்டுக்கு உலகளாவிய சந்தை விரிவாகியிருப்பதைக் குறிப்பிட்ட பிரதமர், இந்தப் பட்ஜெட் அனிமேஷன் காட்சிப் பதிவுகள், பொழுதுபோக்கு விளையாட்டு அம்சங்களில் கவனம் செலுத்துகிறது. அதே போல் இந்தியாவில் தொன்மை காலத்திலிருந்து பயன்படுத்தப்பட்ட பொம்மைகளின் தேவையையும் அவர் வலியுறுத்தினார். தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் ஃபின்டெக் மையத்தன்மையை வலியுறுத்திய பிரதமர், இவை இரண்டுக்கும் வெளிநாடுகளை சார்ந்திருப்பது குறைப்பதுடன் உள்நாட்டு செயல்பாட்டுக்கு அழைப்பு விடுத்தார். சீர்திருத்தம் காரணமாக உருவாகியிருக்கும் புவிசார் தரவுகள் மற்றும் எண்ணற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்துவதற்கான விதிகள் மாற்றத்தை அதிகபட்சம் பயன்படுத்திக் கொள்ள தனியார் துறையினரை பிரதமர் வலியுறுத்தினார். “நமது தற்சார்பு நிலைத்தன்மையிலிருந்து கொவிட் காலத்தில் தடுப்பூசி தயாரிப்பு வரை உலகம் நமது நம்பகத்தன்மையைக் கண்டுள்ளது. அனைத்துத் துறையிலும் இந்த வெற்றியை நாம் பிரதிபலிக்க வேண்டியுள்ளது” என்று பிரதமர் மோடி கூறினார்.
நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்புக்கு வலுவான தரவுகளின் முக்கியத்துவத்தை வலியுறுத்திய பிரதமர், இதற்கான தரங்களையும், விதிமுறைகளையும் உருவாக்குவதற்கான வரைபடத்தை தயாரிக்குமாறுக் கூடியிருந்தோரை அவர் கேட்டுக் கொண்டார்.
மூன்றாவது பெரிய புதிய தொழில் நடைமுறையாக அதாவது இந்திய புதிய தொழில் நடைமுறையாக இருப்பதை குறிப்பிட்டு பேசிய பிரதமர், இந்தத் துறைக்கு அரசிடமிருந்து முழுமையான உதவிக்கு உறுதி அளித்தார். “இளைஞர்களுக்கு திறன் வழங்குதல், மறுதிறன் அளித்தல், திறனை மேம்படுத்துதல் ஆகியவற்றுக்கான இணையப்பக்கம் ஒன்றுக்கும் இந்த பட்ஜெட்டில் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்துடன் நம்பகமான திறன், ஆதாரங்கள், பணம் செலுத்துதல், கண்டுபிடிப்பு படிநிலைகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட ஏபிஐ மூலமாக இளைஞர்கள் சரியான வேலைகளையும், வாய்ப்புகளையும் பெறுவார்கள்” என்று பிரதமர் தெரிவித்தார்.
நாட்டில் பொருள் உற்பத்தியை அதிகப்படுத்துவதற்காக 14 முக்கியத் துறைகளுக்கு 2 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்புத் திட்டங்கள் பற்றியும் பிரதமர் பேசினார். குடிமக்கள் சேவைகளில் கண்ணாடி இழை பயன்பாடு, இ-கழிவு மேலாண்மை, சுற்று பொருளாதாரம், மின்சார வாகனப் போக்குவரத்து போன்ற துறைகளில் நடைமுறை சாத்தியமான ஆலோசனைகளை வழங்குமாறு துறை சார்ந்தவர்களுக்கு தெளிவான வழிகாட்டுதலைப் பிரதமர் வழங்கினார்.
*****
(Release ID: 1802337)
Visitor Counter : 268
Read this release in:
Assamese
,
Telugu
,
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Bengali
,
Manipuri
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Kannada
,
Malayalam