பிரதமர் அலுவலகம்
பிரதமர் திரு நரேந்திர மோடி, ருமேனியா பிரதமர் திரு நிக்கோலே–இயோனல் சியூக்கா-வுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை
Posted On:
28 FEB 2022 10:11PM by PIB Chennai
பிரதமர் திரு நரேந்திர மோடி, 28.02.2022 அன்று ருமேனியா பிரதமர் திரு நிக்கோலே–இயோனல் சியூக்கா-வுடன் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார்.
உக்ரைனில் சிக்கியுள்ள இந்தியர்களை அந்நாட்டிலிருந்து வெளியேற்றி அழைத்துவருவதற்கு கடந்த சில நாட்களாக ருமேனியா அளித்துவரும் ஒத்துழைப்புக்காக அந்நாட்டு பிரதமர் திரு நிக்கோலே–இயோனல் சியூக்காவுக்கு பிரதமர் நன்றி தெரிவித்துக் கொண்டார். குறிப்பாக இந்தியர்கள் விசா ஏதுமின்றி ருமேனியாவிற்குள் நுழைய அனுமதித்து வருவதற்கும், தாயகம் திரும்பும் இந்தியர்களை அழைத்து வரும் சிறப்பு விமானங்களை ருமேனியாவிலிருந்து இயக்க அனுமதி அளித்திருப்பதையும் பிரதமர் பாராட்டினார்.
அத்துடன், இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணியில்,அடுத்த சில நாட்களுக்கு உள்ளூர் அதிகாரிகளுடன் ஒருங்கி்ணைந்து பணியாற்றுவதை மேற்பார்வையிட விமானப் போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு ஜோதிராதித்ய சிந்தியா சிறப்பு தூதுவராக அனுப்பப்பட்டிருப்பது குறித்து பிரதமர் தமது பேச்சுவார்த்தையின் போது எடுத்துரைத்தார்.
உக்ரைனில் நடைபெற்றும் வன்முறைச் சம்பவங்கள் மற்றும் மனித நேய பிரச்சினைகள் குறித்து கவலை தெரிவித்த பிரதமர், மோதல்களை கைவிட்டு பேச்சுவார்த்தைக்கு திரும்ப வேண்டும் என்ற இந்தியாவின் வேண்டுகோளையும் அவர் மீண்டும் வலியுறுத்தினார். பிறநாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திர ஒருமைப்பாட்டை, மதிக்க வேண்டியதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
************
(Release ID: 1802235)
Visitor Counter : 184
Read this release in:
English
,
Urdu
,
Marathi
,
Hindi
,
Manipuri
,
Bengali
,
Assamese
,
Punjabi
,
Gujarati
,
Odia
,
Telugu
,
Kannada
,
Malayalam