பாதுகாப்பு அமைச்சகம்
இங்கிலாந்தில் நடைபெறும் கோப்ரா வாரியர் போர் பயிற்சியி்ல் இந்திய விமானைப்படை பங்கேற்கிறது
प्रविष्टि तिथि:
23 FEB 2022 2:17PM by PIB Chennai
‘எக்ஸ் கோப்ரா வாரியர் 22’ என்ற பெயரில் இங்கிலாந்தின் வாடிங்டனில் 6 முதல் 27 மார்ச் 2022 வரை நடைபெறவுள்ள பன்னாட்டு விமானப்படை பயிற்சியில் இந்திய விமானப்படை பங்கேற்க உள்ளது. இந்திய விமானப்படையின் இலகு ரக போர் விமானமான (LCA) தேஜஸ், இங்கிலாந்து மற்றும் பிற முன்னணி நாடுகளின் விமானப்படைகளின் போர் விமானங்களுடன் இணைந்து பங்கேற்க உள்ளது.
செயல்திறனை வெளிப்படுத்தவும், பங்கேற்கும் நாடுகளின் விமானப்படைகள் பின்பற்றும் சிறந்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், போர்த்திறனை அதிகரிக்கவும், நட்புறவை ஏற்படுத்தும் நோக்கிலும் இந்தப் போர்ப்பயிற்சி நடத்தப்படுகிறது. இலகுரக போர் விமானமான தேஜஸ் அதன் செயல்பாட்டுத்திறன், மற்றும் போர்த்தந்திரத்தை வெளிப்படுத்த இது ஒரு சிறந்த வாய்ப்பாகும்.
ஐந்து தேஜஸ் விமானங்கள் இங்கிலாந்து செல்லவுள்ளன. இதற்கு தேவையான போக்குவரத்து ஒத்துழைப்பை ஐஏஎஃப் சி-17 விமானம் வழங்கும்.
--------
(रिलीज़ आईडी: 1800520)
आगंतुक पटल : 354