நிலக்கரி அமைச்சகம்
‘’இந்தியாவில் மிகவும் நம்பத்தகுந்த பொதுத்துறை நிறுவனம்’’ என்ற விருது பெற்ற இந்திய நிலக்கரி நிறுவனத்துக்கு, அமைச்சர்கள் திரு பிரகலாத் ஜோஷி, திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே ஆகியோர் பாராட்டு.
Posted On:
20 FEB 2022 5:03PM by PIB Chennai
மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் திரு பிரகலாத் ஜோஷி, நிலக்கரி அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கோல் இந்தியா நிறுவனம், சிஐஎல் ,‘’ இந்தியாவில் மிகவும் நம்பத்தகுந்த பொதுத்துறை நிறுவனம்’’ என்ற விருதைப் பெற்றதற்காக பாராட்டுத் தெரவித்துள்ளார்.
இதுதொடர்பாக அமைச்சர் திரு ஜோஷி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். எரிசக்தி துறையில் உலகத் தலைமை நிறுவனமாக மாறுவதற்கு சிஐஎல் மேற்கொள்ளும் முயற்சிகளுக்கு இந்த விருது மேலும் ஊக்கமளிக்கும் என்று கூறியுள்ளார். மத்திய நிலக்கரி, சுரங்கங்கள் மற்றும் ரயில்வே இணையமைச்சர் திரு ராவ்சாகேப் பாட்டீல் தன்வே-யும் இந்த சிறப்பான விருது பெற்றதற்கு சிஐஎல் நிறுவனத்தைப் பாராட்டியுள்ளார்.
கொல்கத்தாவில் நடைபெற்ற ‘’ எரிசக்தி கூட்டம் மற்றும் உயரிய விருது வழங்கும் விழா’’வில், தொழில் வர்த்தக சபைகளின் கூட்டமைப்பு இந்த விருதை சிஐஎல் நிறுவனத்துக்கு வழங்கியது.
(Release ID: 1799867)
Visitor Counter : 211