சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம்

பிளாஸ்டிக் கழிவு நிர்வாக விதிகள் 2016-ன் கீழ் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் நீடிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு அறிவித்துள்ளது

Posted On: 18 FEB 2022 9:23AM by PIB Chennai

பிளாஸ்டிக் கழிவு நிர்வாக விதிகள் 2016-ன் கீழ் பிளாஸ்டிக் பேக்கேஜிங்கில் நீடிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள் பொறுப்பு வழிகாட்டு நெறிமுறைகளை சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சகம் அறிவித்துள்ளது.  குறைந்த பயன்பாட்டையும், அதிகபட்ச மாசினையும் கொண்ட ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை 2022 ஜூலை 1 முதல் தடை செய்வதுடன் இணைந்ததாக இந்த வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. நாட்டில் குப்பையாக போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் ஏற்படும் மாசினை குறைப்பதற்கு இது முக்கியமான நடவடிக்கையாகும்.

இந்த வழிகாட்டு நெறிமுறைகள் பிளாஸ்டிக் பொருட்களுக்கு புதிய மாற்றுகள் உருவாக்கத்தையும், நீடித்த பிளாஸ்டிக் பேக்கேஜிங் குறித்த வணிகங்களுக்குத் திட்டமிடுதலையும் மேம்படுத்தும் என்று டுவிட்டர் செய்தி ஒன்றில் சுற்றுச்சூழல், வனம், பருவநிலை மாற்ற அமைச்சர் திரு.பூபேந்தர் யாதவ் தெரிவித்துள்ளார்.

மேலும் தகவல்களுக்கு, இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்:

https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1799170

***



(Release ID: 1799269) Visitor Counter : 409