சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம்
azadi ka amrit mahotsav

வாகன கண்காணிப்பு சாதனத்திற்கான வரைவு அறிவிப்பு வெளியீடு

प्रविष्टि तिथि: 16 FEB 2022 2:07PM by PIB Chennai

தேசிய அனுமதி (National permit) பெறாமல், ஆர்கன், நைட்ரஜன்,  ஆக்சிஜன் போன்ற வாயுக்கள் மற்றும் அபாயகரமான பொருட்கள் அல்லது நச்சுத்தன்மை கொண்ட பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில், வாகன கண்காணிப்பு சாதனங்கள் பொருத்தாமல் இயக்கப்படுவதாக, மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதையடுத்து மத்திய சாலைப்போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை  அமைச்சகம் 15, பிப்ரவரி 2022 தேதியிட்ட வரைவு அறிவிப்பு  வாயிலாக, சரக்குகளை எடுத்துச் செல்லும் அனைத்து வாகனங்களிலும் குறிப்பாக அபாயகரமான மற்றும் நச்சுப்பொருட்களை எடுத்துச் செல்லும் வாகனங்களில், மோட்டார் வாகன தொழில் தரம் (AIS) 140-யின்படி வாகன கண்காணிப்பு சாதனங்களை பொருத்துவது அவசியம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்த கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை சம்பந்தப்பட்ட தரப்பினர் முப்பது நாட்களுக்குள் அனுப்பி வைக்குமாறு  கோரப்பட்டுள்ளது.

அரசாணை அறிவிப்பைக் காண கீழ் காணும் இணைப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1798730  

 

***************


(रिलीज़ आईडी: 1798779) आगंतुक पटल : 260
इस विज्ञप्ति को इन भाषाओं में पढ़ें: Telugu , English , Urdu , हिन्दी , Marathi , Bengali , Punjabi