இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம்
azadi ka amrit mahotsav

உடல் தகுதி இந்தியா வினாடி வினா போட்டியின் மாநிலச் சுற்று பங்கேற்பாளர்களை திரு அனுராக் தாக்கூரும் பிரபல விளையாட்டு ஆளுமைகளும் பாராட்டினர்.

இடுகை இடப்பட்ட நாள்: 08 FEB 2022 2:40PM by PIB Chennai

முதல் முறையாக பிப்ரவரி 10 அன்று தொடங்கவிருக்கும் உடல் தகுதி இந்தியா வினாடி வினா போட்டியின் மாநிலச் சுற்றில்  பங்கேற்கும் மாணவர்களை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுக்கள் துறை அமைச்சர்  திரு அனுராக் தாக்கூரும் பிரபல விளையாட்டு ஆளுமைகளும் பாராட்டினர்.

“மாண்புமிகு பிரதமர் திரு நரேந்திர மோடியின்  தொலைநோக்கு பார்வையிலான உடல் தகுதி இந்தியா இயக்கத்தை முன்னெடுத்துச் செல்லும் வகையில், முதல் முறையாக பள்ளிகள் நிலையில், உடல் தகுதி மற்றும் விளையாட்டுக்கள் பற்றிய வினாடி வினா போட்டி  தொடங்கப்பட்டது.  இந்தப் போட்டியின் முதல் சுற்றில் பங்கேற்ற மாணவர்களை நான் பாராட்டுகிறேன். நீங்கள் பள்ளிக்கும், மாவட்டத்திற்கும், மாநிலத்திற்கும் பெருமை சேர்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்” என மத்திய அமைச்சர் திரு அனுராக்  தாக்கூர் தெரிவித்தார்.

“உடல் தகுதி இந்தியா  வினாடி வினா போட்டிகளில் வெற்றி பெற்று தங்களின் மாநிலங்களுக்குப் பெருமை சேர்க்க உள்ள மாணவர்களை நான் வாழ்த்துகிறேன் என்று” டோக்கியோ ஒலிம்பிக்கில் வெள்ளி்ப் பதக்கம் வென்ற மீராபாய் சானு தெரிவித்தார்.  இதே போல் டோக்கியோ, பாராலிம்பிக்  போட்டிகளில் வெண்கலப்பதக்கம் வென்ற சரத் குமாரும், டேபிள் டென்னிஸ் வீராங்கனை மனிக்கா பத்ராவும் மாணவர்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளனர்.

மாநில அளவிலான சாம்பியன் போட்டிகளில் இணையதளம் மூலமாக  எட்டு முதல் 32 வரையிலான அணிகள் பங்கேற்க உள்ளன.  முன்னதாக நடைபெற்ற தொடக்கநிலை போட்டிகளில், 13,502 பள்ளிகளைச் சேர்ந்த 36,299 மாணவர்கள் பங்கேற்றனர்.  மாநில அளவில்  நடைபெறும் போட்டிகளைத்  தொடர்ந்து 36 பள்ளிகளின் அணிகள் (ஒவ்வொரு மாநிலத்தின் / யூனியன் பிரதேசத்தின் வெற்றியாளர்கள்)  தேசிய அளவிலான போட்டிக்கு  செல்வார்கள்.

இந்த வினாடி வினா போட்டியின் பல்வேறு கட்டங்களில் வெற்றி பெறும் பள்ளிகளுக்கும், மாணவர்களுக்கும், மொத்தம் ரூ.3.25 கோடி வழங்கப்பட உள்ளது.

மேலும் விவரங்களுக்கு ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும் https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1796473

***************


(வெளியீட்டு அடையாள எண்: 1796556) வருகையாளர் எண்ணிக்கை : 300
இந்த வெளியீட்டை படிக்க: English , Urdu , Marathi , हिन्दी , Bengali , Punjabi , Gujarati , Telugu , Kannada