தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம்

மீடியா ஒன் அலைவரிசைக்கான அப்லிங்க் மற்றும் டவுன் லிங்க் அனுமதியை ரத்து செய்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு கேரள உயர்நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டுள்ளது

Posted On: 08 FEB 2022 2:33PM by PIB Chennai

மீடியா  ஒன் செய்தி மற்றும் நடப்பு நிகழ்வுகள் அலைவரிசைக்கான அப்லிங்க் (தரை மையத்திலிருந்து செயற்கைக் கோளுக்குத் தகவல்களை அனுப்புவது) மற்றும் டவுன் லிங்க் (செயற்கைக்கோளிலிருந்து தகவல்களை தரை மையத்தில் பெறுவது) அனுமதியை ரத்து செய்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் பிறப்பித்த உத்தரவு இன்று கேரள உயர்நீதிமன்றத்தால் ஏற்கப்பட்டது. இந்த அலைவரிசைக்கு உள்துறை அமைச்சகம், பாதுகாப்பு அனுமதியை மறுத்ததால் கட்டுப்பாடுகள்  விதிக்கப்பட்டன.

தகவல் மற்றும் ஒலிபரப்பு  அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட ரிட் மனுவைத் தள்ளுபடி செய்த நீதிமன்றம்  உளவுத்துறையின் தகவல்கள் அடிப்படையில்,  உள்துறை அமைச்சகத்தால் இந்த அலைவரிசைக்குப் பாதுகாப்பு அனுமதி மறுக்கப்பட்டிருப்பது, நியாயமானது என்று கூறியுள்ளது.

மீடியா ஒன் அலைவரிசையை  செயல்படுத்தி வரும் மத்யமம் ஒலிபரப்பு நிறுவனத்திற்கு  வழங்கப்பட்ட அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் அனுமதியை  ரத்து செய்து தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகம் 2022 ஜனவரி 31 அன்று உத்தரவு பிறப்பித்தது.  இந்த அலைவரிசையின் பெயரை அனுமதிக்கப்பட்ட அலைவரிசைகளின் பட்டியலிலிருந்தும் இந்த உத்தரவு நீக்கியது.

ஏற்கனவே இந்த அலைவரிசைக்கு 30.09.2011 முதல் 29.09.2021 வரையிலான காலத்திற்கு அப்லிங்க் மற்றும் டவுன்லிங்க் அனுமதி வழங்கப்பட்டது.

----



(Release ID: 1796538) Visitor Counter : 159